Suriya: பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்.. 3 வார முடிவில் தமிழகத்தில் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Scene Movie TN Box Office Collections: மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்திருந்த 47வது திரைப்படம்தான் சீன். இந்த படமானது 2026 நவம்பர் தொடக்கத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி 3வது வாரத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் “தி ஒன்” (The One) என அன்புடனும், நேசமுடனும் அழைக்கப்பட்டுவரும் நாயகன்தான் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் கோலிவுட்டில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. அதிலும் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் மொத்தமாக 3 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் சீன் (Scene Movie). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்கியிருந்தார். இவர் மலையாளத்தில் ரோமச்சம் மற்றும் ஆவேஷம் போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருந்தவர். மேலும் அவரின் இயக்கத்தில் 3வது படமாக சூர்யாவின் சீன் படமானது இயக்கப்பட்டிருந்தது. இந்த படமானது கடந்த 2026 நவம்பர் 6ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருடன் ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் சுமார் ரூ 260 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!
சூர்யாவின் சீன் திரைப்படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்:
சூர்யா இந்த சீன் திரைப்படத்தில் பார்வை திறனற்ற நாயகனாக நடித்துள்ளார். இதில் அவர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி இன்பராஜ் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது என கூறலாம். மேலும் இதில் நாயகியாக நஸ்ரியா நடித்திருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும் இதில் வில்லனாக மலையாள நடிகர் நஸ்லென் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 100+ மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் ஓ.எம் படம் எப்படி இருக்கு சார்? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்!
சூர்யா மற்றும் நஸ்ரியாவின் சீன் படத்தின் தமிழக வசூல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
₹100 CRORE TN GROSS! ANOTHER BOX OFFICE MILESTONE FOR #SCENE!
Enter into its 3rd week with a strong presence in 225+ theatres despite new releases!
2026 BoxOffice sambavam
By THE ONE @Suriya_offl sir🔥@jithumadavan #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @ZhagaramOffl @rajsekarpandian @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @prosathish
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) November 20, 2026
இந்த சீன் படமானது வெளியாகி 3 வாரங்களை கடந்த பிறகும், திரையரங்குகளில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் தற்போதும் கிட்டத்தட்ட 235 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது உலகளாவிய வசூலில் விரைவில் ரூ 300 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.