Rajinikanth: தனுஷின் ஓ.எம் படம் எப்படி இருக்கு சார்? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்!
Rajinikanth About O.M Movie: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமாக திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினி சந்தித்திருந்தார். அதில் அதில் அவரிடம் தனுஷின் ஓம் திரைப்படம் பற்றி கேள்வி கேட்ட நிலையில், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.
பான் இந்திய நடிகர்களே கொண்டாடும் சிறந்த நடிகராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இவர் இறுதியாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Director Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2026 ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை நடிகர்களே திரையரங்குகளில் சென்று பார்வையிட்டு கொண்டாடியிருந்தனர். மேலும் இப்படமானது ரூ 800 கோடிகளுக்கு அதிகமான வசூலை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், தர்மன் படத்தின் (Dharman Movie) ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பிசியாக உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்த நிலையில், அதில் தனுஷின் (Dhanush) ஓ.எம் படம் (O.M Movie) குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரியாக்ட் செய்துள்ளார்.




இதையும் படிங்க: சிம்பிளாக நடந்துமுடிந்த குக் வித் கோமாளி அஸ்வின் குமாரின் திருமணம் – பொண்ணு யாருனு தெரியுமா?
தனுஷின் ஓ.எம் திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த்:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ரஜினியிடம் ஆரம்பத்தில் தர்மன் படத்தின் ஷூட்டிங் எப்படி உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், “தர்மன் படத்தின் 2 ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்தது. அடுத்தகட்ட ஷூட்டிங் அடுத்தமாதம் (டிசம்பர்) தொடங்கும்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!
மேலும் செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம், சார் தனுஷின் ஓ.எம் படத்தை பார்த்தீர்களா? எப்படி இருக்கு என்பதுபோல கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு உடனே பதிலளித்த ரஜினிகாந்த், “அத நா இன்னும் பார்க்கல” என அதில் கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனுஷின் ஓ.எம் படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
Superstar #Rajinikanth about #Dharman Movie https://t.co/rNsREdwT8q
— Sneakyy (@Sneakyy4u) November 19, 2026
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் இன்று (20/11/2026) உலகமெங்கும் வெளியான திரைப்படம்தான் ஓ.எம். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.