AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது தர்மன் படக்குழு – அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது?

Dharman Movie Shooting Update | தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றால் ரசிகர்களுக்கு தனி பிரியம் உண்டு. அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியாகும் படம் தொடர்பான அப்டேட்களும் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது தர்மன் படக்குழு – அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது?
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 11:50 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக நாயகனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரை தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகி வருகின்றது. மேலும் 75 வயதைக் கடந்தும் தற்போதும் இளம் வயது நடிகர்களுக்கு போட்டியாக சினிமாவில் உச்சத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற வேலை செய்யும் நபர்கள் பொதுவாக இந்த வயதில் ஓய்வை தான் விரும்புவார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வயதிற்கு அப்பாற்பட்டு ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்த உடன் அந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே அடுத்தப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதன் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் வருடத்திற்கு ஒன்று என்ற விகிதத்திலாவது திரையரங்குகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது தர்மன் படக்குழு:

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது தர்மன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை மூன்று கட்டங்களாக நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு நவம்பர் 23-ஆம் தேதி ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் தொடங்கவுள்ளது; இதற்காக அங்கு பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் இறுதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தப் படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027-ஆம் ஆண்டு கோடைகாலத்தில், பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… அமரன் படத்தை பார்த்தபிறகு மன அழுத்தத்திற்கு உள்ளானேன் – நடிகை ஸ்ரீலீலா

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் டிடிஎஃப் வாசனுக்கு நேரடியாக சவால்விட்ட ஜேசன் – வைரலாகும் வீடியோ!

Follow Us