பிக்பாஸில் டிடிஎஃப் வாசனுக்கு நேரடியாக சவால்விட்ட ஜேசன் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே பில்டப் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த டாஸ்கின் போது ஜேசன் சஞ்சய் நேரடியாக டிடிஎஃப் வாசனிடம் சவால் விடும் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் 7 சீசன்கள் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அடுத்ததாக 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். முதல் 7 சீசன்களில் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரே மாதிரியான பாட்டனில் சென்று கொண்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 8-வது சீசனில் இருந்து தொடர்ந்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடைப்பெற்று வருகின்றது. ஒவ்வொரு சீசனிலும் புதுப் புது விசயங்களை புகுத்தி அவை அனைத்தும் சரியாக செல்கிறதா இல்லையா என்பதை கண்காணித்தும் வந்தனர்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் அப்படியே பல விசயங்களை எக்ஸ்பிரிமெண்டாக செய்து வருகின்றனர். தொடர்ந்து விறுவிறுப்பாக செல்லும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 11-வது வாரம் மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே பில்டப் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது.




பிக்பாஸில் டிடிஎஃப் வாசனுக்கு நேரடியாக சவால்விட்ட ஜேசன்:
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று 73-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய டாஸ்கில் டிடிஎஃப் வாசனிடம் ஜேசன் நேரடியாக சவால் விடுகிறார். தமிழ் நாட்டில் 10 கோடி பேர் இருக்கிறார்கள். உன்னை நான் இந்த போட்டியில் நிச்சயமாக தோற்கடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்க இதுதான் காரணம்… அவரது மனைவி ஃபாத்திமா விளக்கம்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day73 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/h5suoHgm9B
— Vijay Television (@vijaytelevision) November 18, 2026
Also Read… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது தனுஷின் ஓம் படக்குழு – வெளியானது அப்டேட்