கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
English Prefix Kolathur MLA V.S. Babu Court Petition : கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார் என்பது குறித்த தகவல்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 18 : கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார் என்பது குறித்த தகவல்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் நவம்பர் 18, 2026 இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 22, 2026 வரை மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியானது. அதன் பிறகு மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : மீனாட்சி நாச்சியார் தவெகவை சேர்ந்தவரா? சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு.. 20 யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ்!




தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை என்றும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5, 2026 மற்றும் 12, 2026 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு அந்த தொகுதியின் எம்எல்ஏவானார வி.எஸ். பாபு. இதன் மூலம் அவர் தனது வெற்றியை கொண்டாடும் வகையில் செய்த செய்கை சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று திடீரென மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க : அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான சி.விஜயபாஸ்கர்.. சொத்துக்குவிப்பு வழக்கில் தீவிர விசாரணை!!
அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால், செப்டம்பர் 22, 2026 அனறுக்கு பிறகு விஎஸ் பாபு உடல்நிலை குறித்து எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. இதனிடையே தமிழக முதல்வர் விஜய், வி.எஸ்.பாபுவை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல, அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோரும் விஎஸ் பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவரது உடல் நிலை குறித்து அமைச்சர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலைகுறித்து தகவல் கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.