AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான சி.விஜயபாஸ்கர்.. சொத்துக்குவிப்பு வழக்கில் தீவிர விசாரணை!!

C. Vijayabaskar Appears Before ED in Nungambakkam: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான சி.விஜயபாஸ்கர்.. சொத்துக்குவிப்பு வழக்கில் தீவிர விசாரணை!!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Nov 2026 12:43 PM IST

சென்னை, நவ.18: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தற்போதைய அரசியல் பிரமுகருமான சி.விஜயபாஸ்கர் அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016-2021) சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது தீவிரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிக்க: “நள்ளிரவில் வீடு புகுந்த கொடிய விஷப்பாம்பு!”.. தாயுடன் தூங்கிய 2 பிஞ்சுக் குழந்தைகள் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..

ரூ.35 கோடி சொத்து குவிப்பு குற்றச்சாட்டு:

முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது வருமானத்திற்குப் புறம்பாகச் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் குவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த காலங்களில் அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களையும் சொத்து விவரங்களையும் பறிமுதல் செய்திருந்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையிலும், வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் அவரிடம் நேரடி விளக்கம் பெற அமலாக்கத்துறை தரப்பில் தொடர்ச்சியாகத் திட்டமிடப்பட்டு வந்தது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீவிர விசாரணை:

அமலாக்கத்துறை தரப்பில் ஏற்கனவே விஜயபாஸ்கருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் முதல் சம்மனுக்கு ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜரானார். அங்குள்ள அதிகாரிகள் அவரிடம் கடந்த சில மணி நேரங்களாகத் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகால வங்கிப் பரிவர்த்தனைகள், முதலீடுகள் மற்றும் சொத்து வாங்கியதற்கான மூல ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: “சென்னையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட ஒலிம்பிக் சிட்டி!”.. செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் நிலத்தை இறுதி செய்தது தமிழக அரசு!

அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள பரபரப்பு:

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டுள்ள நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆவணங்களின் அடிப்படையில் தொடர் விசாரணை மற்றும் அடுத்தடுத்த கட்டச் சட்ட நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us