கோவையில் கொடூரம்! கள்ளக்காதலன் வெறியால் உயிரிழந்த கள்ளக்காதலி.. காரணம் என்ன!
Coimbatore Women Murder : கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகை, பணத்தை திரும்பி கேட்ட கள்ளக்காதலியை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த கள்ளக்காதலனை குடிமங்கலம் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் . இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கோவை பகுதியை சேர்ந்த மெக்கானிக் வேலை பார்த்து வரும் கதிரவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் கணவன், மனைவி போல நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். அத்துடன், அவர்கள் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், கீதாவை, அவரது கள்ளக்காதலன் கதிரவன் தாக்குவதும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் கீதா புகார் அளிப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதா அளித்த புகாரின் அடிப்படையில், கதிரவனை சார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலியின் நகை- பணத்தை விற்ற கள்ளக்காதலன்
பின்னர், சில நாட்கள் கழித்து கதிரவனை, கீதாவே ஜாமினில் எடுத்தார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கீதாவிடம் இருந்து நகை மற்றும் பணத்தை கதிரவன் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன், அவற்றை விற்றுவிட்டு செலவழித்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த கீதா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களிடையே கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. அத்துடன், தனது நகை மற்றும் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கீதா வலியுறுத்தி வந்துள்ளார்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!
வாய்க்காலில் தள்ளி கள்ளக்காதலி கொலை
இந்த நிலையில், நகை மற்றும் பணத்தை திரும்ப தருவதாக கீதாவை ஒரு பகுதிக்கு வருமாறு கதிரவன் அழைத்த நிலையில், அவர் அங்கு சென்றார். அப்போது, அவரிடம் கதிரவன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவர் கள்ளக்காதலி கீதாவை முடிவு செய்து அங்கிருந்து குடிமங்கலம் அருகே உள்ள பி. ஏ. பி. வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்று அதில் தள்ளி விட்டுக் கொலை செய்தார். இதில், தண்ணீரில் விழுந்த கள்ளக்காதலி கீதா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தண்ணீரில் தவறி விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கொலை செய்து நாடமாடிய கள்ளக்காதலன் கைது
உடனே, சம்பவம் இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் நகை, பணம் தகராறில் கள்ளக்காதலியே வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு நாடகமாடியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கள்ளக்காதலன் கதிரவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: திமுக- காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிவு? ராகுல்காந்தி அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!