AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கேரள ‘சத்யா’ உணவு.. அரவணை பாயாசம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்..

Sabarimala Season Update: சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அரவணை பாயாசத்தைப் பெற தானியங்கி இயந்திரங்கள் (Vending Machines) மற்றும் பாரம்பரிய கேரள சத்யா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மண்டல மகர விளக்கு பூஜைக்காக வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கேரள ‘சத்யா’ உணவு.. அரவணை பாயாசம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்..
கேரளா சத்யா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Nov 2026 12:25 PM IST

கேரளா, நவ.18: உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் தற்போது கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி விரதமிருந்து சன்னிதானத்திற்கு வருகை தந்துள்ளனர். தினந்தோறும் 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் நிலையில், அவர்களின் தரிசனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவசம் போர்டும், கேரள அரசும் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு சில அதிரடியான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: மாலையிடும் ஐயப்ப பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?

அரவணை பாயாசம் பெற நவீன இயந்திரங்கள்:

சபரிமலையில் சன்னிதானம் மற்றும் நெய்பிஷேகம் செய்யும் பகுதிகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடிய முக்கியக் காரணங்களில் ஒன்றாகப் பிரசித்தி பெற்ற ‘அரவணை பாயாசம்’ பெறுவதற்கான நீண்ட வரிசைகள் இருந்து வந்தன. இந்தக் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தோடு, தற்போது முதல்முறையாக அரவணை பாயாசத்தை எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில் தானியங்கி இயந்திரங்கள் (Vending Machines) நிறுவப்பட்டுள்ளன. சன்னிதானப் பகுதியில் மொத்தம் 5 தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்களது பணத்தைச் செலுத்தி அல்லது ஸ்கேன் செய்து உடனடியாக அரவணைப் பிரசாதத்தைப் பெற்றுச் செல்லலாம். இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இந்த இயந்திரங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

பாரம்பரிய கேரள ‘சத்யா’ உணவு திட்டம்:

பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்திலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக உப்புமா மற்றும் புலாவ் போன்ற உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அந்த முறைகள் மாற்றப்பட்டு, கேரளாவின் பாரம்பரிய மற்றும் சுவையான ‘சத்யா’ (sadhya) உணவு வழங்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைக்காக வந்துள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்தத் பாரம்பரிய உணவை விரும்பி உட்கொள்ளும் வகையில் சுத்தமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.. முழு விவரம்!!

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்பாடுகள்:

தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சபரிமலையில், எவ்விதத் தடையுமின்றி சுவாமி ஐயப்பனைத் தரிசித்துச் செல்லத் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் காவல்துறையினரின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நேரம் காத்திருப்பைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நவீன தானியங்கி இயந்திர வசதிகளும், உயர்தர உணவுத் திட்டங்களும் பக்தர்களின் பயணத்தை எளிமையாக்கியுள்ளன. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ள இந்த நல்வசதிகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Follow Us