AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சபரிமலை - Sabarimala

சபரிமலை - Sabarimala

தென்னிந்தியாவில் அதிக பக்தர்கள் வருகை தரும் கோயில்களில் சபரிமலை ஒன்றாகும். திருவிவதாங்கூர் தேவஸ்வத்தியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அய்யப்ப கோயில், பதானம்தித்தா மாவட்டத்தில் ரன்னி தாலுகாவில் அமைந்துள்ளது. மேலும் இந்த புனித கோயில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மண்டல காலத்தில் மகரவில் பண்டிகையின் போது பெரும்பாலான பக்தர்கள் சபரிமலையை அடைகிறார்கள். மேலும் இது அனைத்து மலையாள மாதங்களின் முதல் தேதியிலும் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த கோயிலுக்கு வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இது சுமார் ஐந்து கோடியாக இருக்கும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,260 மீட்டர் (4,134 அடி) உயரத்தில் 18 மலைகளால் சூழப்பட்டுள்ளது.

Read More

சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!

Sabarimala Gold Theft Case: சபரிமலை தங்க திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகர் ஜெயராமிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவரிடம் வாக்கு மூலத்தை எஸ். ஐ. டி. குழு பதிவு செய்து கொண்டது.

மகர விளக்கு பூஜை நிறைவு…சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு…மீண்டும் பிப்.12-இல் நடை திறப்பு!

Sabarimala Ayyappa Temple: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்ட பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததையடுத்து, கோயில் நடை அடைக்கப்பட்டு அதற்கான சாவி மற்றும் எதிர்கால பூஜைகள் நடத்துவதற்கான பண பை ஆகியவை கோவில் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர பூஜை நிறைவு.. நாளையுடன் நடை அடைப்பு.. நெய் அபிஷேகம் இன்று நிறைவு..

Sabarimala Ayyappan temple: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் கடந்த 31ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, நாளை இரவு குருதி பூஜை நடை​பெற உள்​ளது. அதன் பின்னர், நாளை இரவு 11 மணி வரை மட்​டுமே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனு​ம​திக்​கப்​படு​வர்.

ஜோதி வடிவில் ஐயப்பன்… சபரிமலையில் ஏற்றப்பட்ட மகர ஜோதி…. உணர்ச்சி பெருக்குடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Makara Vilakku 2026: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று நடைதிறக்கப்பட்டது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14, 2026 அன்று பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி ஏற்றப்பட்டது.

சபரிமலையில் இன்று மகர ஜோதி.. நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் இன்று மகரவிளக்கு மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னிதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சன்னிதானத்தில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு மற்றும் மகர ஜோதியைக் காண குறைந்தது 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை…ஜோதி வடிவில் காட்சியளிக்கும் ஐயப்பன்!

Sabarimala Ayyappa Temple: கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர விளக்கு ஜோதி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் அலைகடலென குவிந்துள்ளனர். மேலும், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

ஐயப்ப பக்தர்களே… விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

விமானத்தில் பயணம் செய்யும் ஐய்யப்ப பக்தர்கள் எடுத்துச் செல்லும் இருமுடியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதோடு, சோதனையின் போது இருமுடியைத் திறந்து உள்ளே உள்ள வைபவப் பொருட்களை வெளியே எடுத்து, மீண்டும் கட்ட வேண்டிய நிலை இருந்தது. இதனால், பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோவில் முன் தேங்காய் உருட்டுவது ஏன்?

கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சபரி மலை செல்லும் பக்தர்கள் மாளிகைபுரத்து அம்மன் கோவிலின் முன் தேங்காய் உருட்டுவது முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது. அதன் பின்னால் உள்ள காரணம் குறித்து பார்க்கலாம்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்… திகைக்கும் அரசு!

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் மாலை அணிவித்து தொடங்கிவிட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவர கிளம்பியுள்ளனர். இதனால் சபரிமலையில் கடுமையான கூட்டம் நிலவுகிறது. சபரிமலை ஐயப்பனை பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

சபரிமலையில் இருமுடி கட்டின் முக்கியத்துவம் என்ன? ஆச்சரிய தகவல்

Sabarimala Mandala Season : சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி மலைக்கு செல்ல தயாராகி வருகின்றனர். குறிப்பாக இருமுடி கட்டு என்பது முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. அதன் பின்னால் உள்ள காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.

சபரிமலையில் கூட்ட நெரிசல்… இனி ஒருநாளில் 75,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. புதிய கட்டுப்பாடுகள்!

Darshan Restriction Order : சபரிமலையில் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் சபரிமலையில் ஏற்பாடுகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் ஏன் ஒருங்கிணைப்பு இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேள்வி எழுப்பியது.

சபரிமலைக்கு தேங்காயில் நெய் நிரப்பி எடுத்து செல்வதால் என்ன பலன்?

Sabarimala : சபரிமலை ஐயப்பன் கோவிலிலுக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். அப்படி செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் போது தேங்காயில் நெய் ஊற்றி எடுத்து செல்வார்கள். அதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சபரிமலைக்கு மாலை அணிகிறீர்களா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்..

மாலை அணிந்தவுடன் “ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்ற நாமஸ்மரணை தினமும் சக்தியுடன் ஜபிக்க வேண்டும். பக்தர்கள் காலை–மாலை குளித்து, திருநீறு, சந்தனம் அணிந்து, எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவர். நோன்பு, சத்துவ உணவு, கோபமின்மை, பொறுமை, கருணை, தன்னடக்கம் போன்ற நல்ல குணங்களை வளர்ப்பதே இந்த விரதத்தின் நோக்கம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிக கூட்டம்! குவியும் பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே ஆன்மிக பயணங்களும் தொடங்கிவிடும். சபரிமலை ,  முருகன் கோயில்களில் சீசனும் தொடங்கிவிடும். குறிப்பாக சபரிமலையில் தற்போது கடுமையான பக்தர்கள் கூட்டம் உள்ளது. சாமி தரிசிக்க பத்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்

கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை..

Kerala Heavy Rain Alert: கார்த்திகை மாதம் தொடங்கியிருப்பதால் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பக்தர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மழை நாட்களில் தேவையற்ற பயணங்களையும் மலை ஏற்றத்தையும் தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.