AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐயப்ப பக்தர்களே… விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

விமானத்தில் பயணம் செய்யும் ஐய்யப்ப பக்தர்கள் எடுத்துச் செல்லும் இருமுடியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதோடு, சோதனையின் போது இருமுடியைத் திறந்து உள்ளே உள்ள வைபவப் பொருட்களை வெளியே எடுத்து, மீண்டும் கட்ட வேண்டிய நிலை இருந்தது. இதனால், பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

ஐயப்ப பக்தர்களே… விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு
சபரிமலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Nov 2025 10:25 AM IST

சபரிமலை மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். அவ்வாறு சபரிமலைக்கு நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், பெரும்பாலும் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்கு வந்திறங்கி, அங்கிருந்து பம்பை வழியாக சன்னிதானம் நோக்கிப் பயணம் செய்கின்றனர். இதில், சிக்கல் என்னவென்றால், அவ்வாறு விமானத்தித்தில் பக்தர்கள் செல்லும்போது, இருமுடியை தங்களுடன் எடுத்துச்செல்வதில் தடை உள்ளதாக சர்ச்சை நிலவி வந்தது. பொதுவாகவே, விமான நிலையங்களுக்கு கையோடு எடுத்துச் செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.

இதையும் படிக்க: சென்னையை நோக்கி நகரும் ‘தித்வா’ புயல்: அதி கனமழை எச்சரிக்கை!!

சிரமத்துக்கு ஆளான பக்தர்கள்:

இதனால், பக்தர்கள் எடுத்துச் செல்லும் இருமுடியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதோடு, சோதனையின் போது இருமுடியைத் திறந்து உள்ளே உள்ள வைபவப் பொருட்களை வெளியே எடுத்து, மீண்டும் கட்ட வேண்டிய நிலை இருந்தது. இதனால், பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனை தவிர்க்க, இருமுடியை சோதனை செய்ய வேண்டாம் என்ற கோரிக்கை நாடு முழுவதும் இருந்து முன்வந்தது.

செல்வப்பெருந்தகை கோரிக்கை:

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக இந்துக்களுக்கு பாடுபடுகிற கட்சி என்கிறார்கள். பாஜக இந்துக்கள் கட்சி என கூறுகிறார்கள். நானும் இந்து தான் ஆனால், சபரிமலை செல்கின்ற பக்தர்கள் இருமுடி பைகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி என்றால், இவர்கள் இந்துக்களின் ஆதரவாளர்களா? இந்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களா? என்ற கேள்வி எழுகிறது.

எதற்காக இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாஜக அரசு எடுக்கிறது? இறைவனை வழிபட வேண்டும் என்பது தானே அவர்களின் நோக்கம். எல்லா இறைவனையும் வழிபட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் பேரியக்கத்தின் நோக்கம் என்று கூறியிருந்தார்.

இதையும் படிக்க: தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை

இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி:

இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, இருமுடியை மட்டும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தாமல், நேரடியாக விமானத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. அதைசமயம், பாதுகாப்பு பணியாளர்களுடன் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராமமோகன் நாயுடு வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தநிலையில், ஜன. 20-ம் தேதி மண்டல பூஜை காலம் முடிவடைந்ததும், மீண்டும் தடை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

Follow Us