AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையை நோக்கி நகரும் ‘தித்வா’ புயல்: அதி கனமழை எச்சரிக்கை!!

இன்று மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் அதி ​க​னமழைக்​கான ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. இன்று பிற்பகலுக்கு பிறகு திட்வா புயல் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அதன்பின், சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையை நோக்கி நகரும் ‘தித்வா’ புயல்: அதி கனமழை எச்சரிக்கை!!
தித்வா புயல்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Nov 2025 06:42 AM IST

சென்னை, நவம்பர் 29: வங்கக்கடலில் இலங்கை அருகே உருவானதித்வாபுயல் சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், செங்கல்பட்டு உட்பட நான்கு கடலோர மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவிலும் நேற்று மாலை வரை நிலைகொண்டு இருந்தது. இது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட தமிழக கடல் பகுதிகள் மற்றும் புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை இன்று (சனிக்கிழமை) காலை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை.. வெதர்மேன் வானிலை அலர்ட்!

4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்:

இதன் காரண​மாக, டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது. மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் அதி ​க​னமழைக்​கான ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. பொதுவாக காற்றின் சுழற்சி 63 கி.மீ முதல் 83 கி.மீ வேகத்தில் இருந்தால் அது புயலாக கணக்கில் கொள்ளப்படும் தற்போது வரை 65 கி.மீ வேகத்தில் காற்று சுழற்சி இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சென்னைக்கு 530 கி.மீ தொலைவில் புயல்:

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், தென்​மேற்கு வங்​கக்​கடல், அதை ஒட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் நில​விய ‘தித்​வா’ புயல், இலங்கை திரி​கோண மலை​யில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ., சென்​னை​யில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலை​வில் நிலை​கொண்​டுள்​ளது. இது வடமேற்​காக நகர்ந்​து, இலங்கை கடலோரப் பகு​தி​கள் மற்​றும் அதை ஒட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களைக் கடந்து நவ.30 (நாளை) அதி​காலை வங்​கக்​கடல் பகு​தி​களில் வட தமிழகம் – புதுச்​சேரி மற்​றும் அதை ஒட்​டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும்.

இதன் காரண​மாக வட தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் (நவ.29, 30) பெரும்​பாலான இடங்களி​லும், தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இன்று டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இதர கடலோர மாவட்​டங்களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​திகளுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கனமழை கொட்டித்தீர்க்கும்:

புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்ணா​மலை, காஞ்​சிபுரம், சென்னை, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, நாமக்​கல், கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும்.

இதையும் படிக்க: தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை

நாளை டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தி​லும், இதர வட தமிழக கடலோர மாவட்டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த காற்று வீசக்கூடும். திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்களில் அதி​க​னமழை​யும், சென்னை, காஞ்​சிபுரம், வேலூர், செங்​கல்பட்​டு, திருப்​பத்தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்​ளதாக கூறப்​பட்​டுள்​ளது.

Follow Us