AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ISSF World Cup 2026: 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு.. தங்கம் வென்ற இஷா சிங்.. வெண்கலத்துடன் முடித்த மனு பாக்கர்!

Esha Singh wins Gold: இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இஷா சிங், இன்று அதாவது 2026 2026 ஜூலை 27ம் தேதி நடைபெற்ற ISSF உலகக் கோப்பை (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற தனது சக நாட்டு வீராங்கனை மனு பாக்கரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

ISSF World Cup 2026: 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு.. தங்கம் வென்ற இஷா சிங்.. வெண்கலத்துடன் முடித்த மனு பாக்கர்!
இஷா சிங் - மனு பாக்கர்Image Source: X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jul 2026 17:43 PM IST

சீனாவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிறந்து விளங்கினர். இந்தப் பிரிவில் இந்தியா (Indian Team) ஒன்று அல்ல, 2 பதக்கங்களை (Medals) வென்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதிச் சுற்றில், இஷா சிங் (Esha Singh) 50 புள்ளிகளுக்கு 40 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனப் போட்டியாளர் யூ ஜாங் 37 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வெற்றியாளரான மனு பாகர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். முன்னதாக, மனு பாகர் 586 புள்ளிகள் பெற்று 5வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கும், இஷா சிங் தகுதிச் சுற்றில் 585 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றிருந்தனர்.

ALSO READ: இந்தியாவிற்கு முதல் தங்கம்.. 190 கிலோ எடை தூக்கி தங்கத்தை வென்ற மீராபாய் சானு!

இஷா சிங் தங்கப் பதக்கம்:


இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இஷா சிங், இன்று அதாவது 2026 2026 ஜூலை 27ம் தேதி நடைபெற்ற ISSF உலகக் கோப்பை (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற தனது சக நாட்டு வீராங்கனை மனு பாக்கரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதிச் சுற்றில் 50-க்கு 40 புள்ளிகள் பெற்று இஷா சிங் தங்கப் பதக்கம் வென்றார். 50-க்கு 37 புள்ளிகள் பெற்ற சீனாவின் யூயூ ஜாங் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாகர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னாள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தங்கப் பதக்க வெற்றியாளரான ராஹி சர்னோபத் 582 புள்ளிகள் பெற்றார். அதே சமயம், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (576) மற்றும் அபித்ன்யா அசோக் பாட்டீல் (573) ஆகியோர் தரவரிசைப் புள்ளிகளுக்காக (RPO) மட்டுமே போட்டியிட்டு சிறப்பாகச் செயல்பட்டனர்.

இஷா சிங் மீது குவியும் எதிர்பார்ப்பு:

இஷா சிங் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்தில், இஷா சிங் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது உலகக் கோப்பையில் இஷா சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இஷா சிங்கின் இந்த வெற்றிக்குப் பிறகு, 2028 ஒலிம்பிக்கில் அவர் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ALSO READ: கோவில்பட்டி முத்துபாண்டி வெள்ளி வென்றார்.. காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழர்!

இந்தியா மொத்தம் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது..?

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பையின் பதக்கப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டுவதில் இஷா சிங்கின் தங்கப் பதக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்தது. இந்தியா வென்ற 14 பதக்கங்களில் 4 பதக்கங்களை இஷா கிங் வென்றுள்ளார். இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கும்.

Follow Us