AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Common Wealth Games 2026: ஜிம்னாஸ்டிக்ஸின்போது நழுவிய கைகள்.. தரையில் பலமாக மோதிய இங்கிலாந்து வீரர்.. அதிர்ச்சியை கொடுத்த வீடியோ!

CWG 2026 Gymnastics Scary Incident: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து கடந்த 3 முறை ஆடவர் குழு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் பதக்க வீரரான மேக்ஸ் விட்லாக்கிற்குப் பதிலாக கேப்ரியல் லாங்டன் இந்த முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இங்கிலாந்தின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

Common Wealth Games 2026: ஜிம்னாஸ்டிக்ஸின்போது நழுவிய கைகள்.. தரையில் பலமாக மோதிய இங்கிலாந்து வீரர்.. அதிர்ச்சியை கொடுத்த வீடியோ!
காமன்வெல்த் விளையாட்டில் விபத்து
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jul 2026 18:01 PM IST

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (Common Wealth Games 2026) உலக விளையாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இந்தநிலையில், 2026 காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2026 ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்ற ஆடவர் ஜிம்னாஸ்டிக்ஸ் (Gymnastics) இறுதிப் போட்டியின்போது, ​​19 வயதான இங்கிலாந்து வீரர் கேப்ரியல் லாங்டன், தரையில் விழுந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து அணி தவறவிட்டது.

ALSO READ: பாதிப்பு கொடுத்த போலியோ.. மனம் தளராமல் பதக்கத்தை தூக்கிய ஜகண்டு குமார்.. யார் இவர்?

லாங்டன் கிடைமட்டக் கம்பியில் சுழன்று கொண்டிருந்தபோது, ​​அவரது கை வழுக்கியதால், அவரது தலையானது தரையில் பலமாக மோதியது. அந்தப் பயங்கரமான நிகழ்வை கண்டு அரங்கம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்தது. இதனை தொடர்ந்து, கேப்ரியல் லாங்டன் எழுந்து நிற்க முயற்சித்தபோது தானாக நிற்க முடியாததால், மருத்துவக் குழுவினர் உடனடியாக வந்து அவருக்குச் சிகிச்சை அளித்தனர். அவரது தலை மற்றும் கழுத்தை நிலையாக இருக்க சிறப்பு ஆதரவுகள் பொருத்தப்பட்ட பிறகு, அவர் ஸ்ட்ரெச்சரில் அரங்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். இந்த நேரத்தில் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

தங்கப் பதக்கத்தை தவறவிட்ட இங்கிலாந்து:


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து கடந்த 3 முறை ஆடவர் குழு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் பதக்க வீரரான மேக்ஸ் விட்லாக்கிற்குப் பதிலாக கேப்ரியல் லாங்டன் இந்த முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இங்கிலாந்தின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். மற்ற இங்கிலாந்து விளையாட்டு வீரர்கள் லாங்டனுடன் தொடர்ந்து போட்டியிட்டனர். இறுதியில், இங்கிலாந்து அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இதில், கனடா தங்கப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

ALSO READ: காமன்வெல்த் போட்டிகள்: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. ஜூலை 26ம் தேதிக்கான அட்டவணை

லாங்டனுக்கு என்ன ஆனது..?

இறுதிப் போட்டிக்குப் பிறகு, கேப்ரியல் லாங்டன் நலமுடன் இருப்பதாகவும், அவரால் நன்றாக நடக்க மற்றும் பேச முடிவதாகவும் இங்கிலாந்து அணி அறிவித்தது. கேப்ரியல் லாங்டன் நலமாக இருந்ததோடு, ஒரு நாள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு மறுநாள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Follow Us