காமன்வெல்த் 2022 போட்டியில் இடம்பெற்ற கிரிக்கெட் 2026ல் நீக்கம் – காரணம் என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் கிரிக்கெட் இடம் பெற்ற நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் தொடரில் கிரிக்கெட் இடம்பெறாதது ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் கிரிக்கெட் இடம் பெற்ற நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் தொடரில் கிரிக்கெட் இடம்பெறாதது ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோவில் ஜூலை 23, 2026 இன்று துவங்குகின்றன. இந்த நிலையில் இந்த முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் மேலும் 8 விளையாட்டுகள் போட்டி அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
24 ஆண்டுகளுக்கு பிறகு காமன்வெல்த் போட்டியில் இடம்பெற்ற கிரிக்கெட்
காமன்வெல்த் தொடரில் கிரிக்கெட் முதன்முறையாக கடந்த 1998 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் இடம்பெற்றது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : IND vs ZIM: ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி.. ஹராரே பிட்ச் யாருக்கு சாதகம்?




அந்த தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை வந்தது. இருப்பினும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை இந்திய மகளிரணி கைப்பற்றியது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் போட்டியை நடத்துவதற்கான செலவு 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரித்ததால், கடந்த 2023 ஆம் ஆண்டே போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விக்டோரியா அரசு விலகியது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
2026ல் ஏன் கிரிக்கெட் இல்லை?
இந்த நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் குறுகிய கால அவகாசத்தில் போட்டியை நடத்த முன் வந்துள்ளது. இந்த நிலையில் குறைந்த செலவில் போட்டியை நடத்த வேண்டும் என்பதால் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் கிளாஸ்கோ நகர போட்டி ஏற்பாட்டாளர்களும் சேர்ந்து பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 19 விளையாட்டுகள் இடம்பெற்ற நிலையில், 2026 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறும் போட்டியில் 10 விளையாட்டுக்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : Common Wealth Games 2026: காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள் எப்போது களமிறங்குவார்கள்..? முழு அட்டவணை இதோ!
மேலும் அதில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ரக்பி, மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளை நடத்த அதற்கென பிரத்யேக மைதானம் பிச்சை பராமரித்தல், நிறைய பணியாளர்கள் தேவைப்படுவதால் கிரிக்கெட் நடத்த செலவு மேலும் அதிகரிக்கும். இதனால் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், புதிய மைதானங்கள் அமைப்பது, பராமரிப்பு செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்பதால், கிரிக்கெட் உள்ளிட்ட அதிக செலவு ஏற்படுத்தும் விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.