AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Commonwealth Games 2026: 21லிருந்து 10 ஆக குறைப்பு.. பாதியாக குறைந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுகள்!

Commonwealth Games 2026 Sports List: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது, ​​இந்தப் பலதரப்பு நிகழ்வில் 21 விளையாட்டுகள் இடம்பெறத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போட்டிகளை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 2.6 பில்லியன் டாலரிலிருந்து 6-7 பில்லியன் டாலராக அதிகரித்தபோது சிக்கல்கள் எழுந்தன.

Commonwealth Games 2026: 21லிருந்து 10 ஆக குறைப்பு.. பாதியாக குறைந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுகள்!
காமன்வெல்த் விளையாட்டு 2026
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jul 2026 20:03 PM IST

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (2026 Commonwealth Games) வருகின்ற 2026 ஜூலை 23ம் தேதி முதல் தொடங்குகின்றன. கடந்த கால காமன்வெல்த் போட்டிகளை போல் இல்லாமல், வருகின்ற காமன்வெல்த் போட்டிகளில் விளையாட்டுகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, 2026 காமன்வெல்த் போட்டியானது கடந்த 32 ஆண்டுகளில் நடைபெறும் மிகச் சிறிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாக இருக்கும். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 20 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போட்து நடைபெறுவதில் வெறும் 10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெறும். இதில், அதிக விளையாட்டு ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் (Cricket) முதல் ஹாக்கி மற்றும் பேட்மிண்டன் வரையிலான விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன.

ALSO READ: உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல்.. ஜப்பான் ஓபனில் பிவி சிந்து சாம்பியன்..!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது, ​​இந்தப் பலதரப்பு நிகழ்வில் 21 விளையாட்டுகள் இடம்பெறத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போட்டிகளை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 2.6 பில்லியன் டாலரிலிருந்து 6-7 பில்லியன் டாலராக அதிகரித்தபோது சிக்கல்கள் எழுந்தன. அதன் விளைவாக, ஆஸ்திரேலியா அரசாங்கம் 2023 ஜூலை 18 அன்று போட்டிகளை நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருந்தது. அதன்பிறகு, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை எடுத்து நடத்துவது யார் என்ற கேள்வி மட்டும் தொடந்தது. இதை தொடர்ந்து, கடந்த 2024 மார்ச் மாதம் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு இந்த நிகழ்வை நடத்துவதற்காக மலேசியாவிற்கு 100 மில்லியன் வழங்க முன்வந்தது. ஆனால், போட்டிகளை நடத்துவதற்கு அந்தத் தொகை போதுமானதல்ல என்று கூறி மலேசியா அதை நிராகரித்தது.

முன்வந்த கிளாஸ்கோ:

யாரும் கிடைக்காததால், கிளாஸ்கோ 2024 ஏப்ரலில் போட்டிகளை நடத்த முன்மொழிந்தது. கிளாஸ்கோ கடைசியாக 2014-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது, அப்போது மொத்தம் 18 விளையாட்டுகள் நடைபெற்றன. அப்போது கட்டப்பட்ட உள்கட்டமைப்பு மீண்டும் பயன்படுத்தப்படும். மேலும் விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடங்கள் விளையாட்டு கிராமத்தில் கட்டப்படாமல், கலடோனியன் பல்கலைக்கழகம் மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் தங்குமிடங்கள் மற்றும் ஹோட்டல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும்.

ALSO READ: தனித்துவமான போட்டி நேரத்தில் தொடங்கும் இந்தியா – ஜிம்பாப்பே தொடர்.. எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

கிரிக்கெட், பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகள் நீக்கம்:

கிளாஸ்கோ குறைந்த செலவில் இந்தப் போட்டிகளை நடத்துவதால், விளையாட்டுகளின் எண்ணிக்கை 21-லிருந்து 10-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த 10 விளையாட்டுகளில் கூடைப்பந்து, கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம், பௌல்ஸ், குத்துச்சண்டை, சைக்கிளிங், ஜூடோ, நெட்பால், நீச்சல் மற்றும் பளுதூக்குதல் ஆகியவை அடங்கும். 2022 பர்மிங்காம் போட்டிகளுடன் ஒப்பிடுகையில், நீர் விளையாட்டுகள், பேட்மிண்டன், கடற்கரை கைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, லான் பௌல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டிரையத்லான் மற்றும் மல்யுத்தம் ஆகியவை இதில் சேர்க்கப்படாது.

Follow Us