AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Japan Open 2026: உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல்.. ஜப்பான் ஓபனில் பிவி சிந்து சாம்பியன்..!

PV Sindhu Champion: மதிப்புமிக்க ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையாக பி.வி. சிந்து தற்போது உருவெடுத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் பி.வி. சிந்து வெல்லும் முதல் முக்கிய சாம்பியன் பட்டம் இதுவாகும். உலக சாம்பியனான அகனே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இந்த மறக்க முடியாத வெற்றியை பி.வி. சிந்து தனதாக்கிக்கொண்டார்.

Japan Open 2026: உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல்.. ஜப்பான் ஓபனில் பிவி சிந்து சாம்பியன்..!
பிவி சிந்து
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 20 Jul 2026 19:05 PM IST

மதிப்புமிக்க ஜப்பான் ஓபன் (Japan Open 2026) பட்டத்தை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையாக பி.வி. சிந்து தற்போது உருவெடுத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் பி.வி. சிந்து வெல்லும் முதல் முக்கிய சாம்பியன் பட்டம் இதுவாகும். உலக சாம்பியனான அகனே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இந்த மறக்க முடியாத வெற்றியை பி.வி. சிந்து (PV Sindhu) தனதாக்கிக்கொண்டார். ஜப்பான் ஓபனின் இறுதிப் போட்டியில், ஜப்பானிய நட்சத்திர வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ளவருமான அகானே யமகுச்சியை அவரது சொந்த மண்ணில் தோற்கடித்து பி.வி. சிந்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த அற்புதமான வெற்றியின் மூலம், சிந்து தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் முதல் முறையாக ஜப்பான் ஓபன் சாம்பியன் ஆனார்.

2019 உலக சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு இது அவரது மிகப்பெரிய பட்டமாகும்.  17 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகின்ற 2026 ஆகஸ்ட் 17 முதல் 23 வரை இந்தியாவின் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தவுள்ளது. இதில், பிவி சிந்தும், லக்ஷ்யா சென்னும் பதக்கங்களை வெல்வார்கள் என்று சாய்னா நேவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ALSO READ:

சாய்னா நேவால் நம்பிக்கை:

உலக சாம்பியன்ஷிப் குறித்து பேசிய சாய்னா நேவால், ”கடந்த 2-3 வருடங்கள் சிந்துவுக்கு மிகவும் கடினமாக இருந்தன. சிந்து தொடர்ந்து காயங்களுடன் போராடினார். ஆனால் அவர் மீண்டு வந்த விதம் ஆச்சரியமாக இருக்கிறது. ஜப்பான் ஓபனில் 3-4 முன்னணி வீராங்கனைகளை பிவி சிந்து தோற்கடித்தார். முன்பை விட இப்போது அவரது தாக்குதல் திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. வயது மற்றும் காயத்துடன் உச்சத்தில் நீடிப்பது எளிதல்ல. மிகுந்த மன அழுத்தம் உள்ளது. இந்த வெற்றி சிந்துவின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. ஒரு சாம்பியனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் எப்போதும் மீண்டு வருவார்” என்று சாய்னா நேவால் கூறினார்.

ALSO READ: கோல்டன் பூட் முதல் கோல்டன் க்ளோவ்ஸ் வரை.. ஃபிஃபா உலகக் கோப்பையில் 4 முக்கிய விருதுகள் வென்ற வீரர்கள்!

இளம் வீரர்களுக்கு அறிவுரை


2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, ”இளம் வீரர்கள் நிலைத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும்.பல இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால், அவர்கள் பெரிய போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். பேட்மிண்டன் விளையாட்டில் நிலைத்தன்மைதான் முக்கியம். அதனால்தான் இந்தியாவின் பேட்மிண்டன் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டாக மாறியுள்ளது.” என்றார்.

Follow Us