AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: கோல்டன் பூட் முதல் கோல்டன் க்ளோவ்ஸ் வரை.. ஃபிஃபா உலகக் கோப்பையில் 4 முக்கிய விருதுகள் வென்ற வீரர்கள்!

FIFA World Cup Awards: உலகக் கோப்பை வரலாற்றில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஸ்பெயினின் வெற்றிக்கு ஃபெரான் டோரஸ் முக்கிய காரணமாக இருந்தார்.  கூடுதல் நேரத்தில் ஃபெரான் டோரஸ் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்த ஆட்டத்திற்காக ஃபெரான் டோரஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

FIFA World Cup 2026: கோல்டன் பூட் முதல் கோல்டன் க்ளோவ்ஸ் வரை.. ஃபிஃபா உலகக் கோப்பையில் 4 முக்கிய விருதுகள் வென்ற வீரர்கள்!
ஃபிஃபா உலகக் கோப்பை விருதுகளை வென்ற வீரர்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Jul 2026 17:43 PM IST

48 அணிகளுடன் தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை 2026ல் (FIFA World Cup 2026) பலம் மிக்க அர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் இறுதியாக 2026 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில், வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் (Spain) அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஸ்பெயினின் வெற்றிக்கு ஃபெரான் டோரஸ் முக்கிய காரணமாக இருந்தார்.  கூடுதல் நேரத்தில் ஃபெரான் டோரஸ் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்த ஆட்டத்திற்காக ஃபெரான் டோரஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்தநிலையில், ஃபிஃபா உலகக் கோப்பையில் முக்கியமான 4 விருதுகளை வென்ற வீரர்கள் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஸ்பெயின் சாம்பியன் ஆக உதவிய ஒரே கோல்.. ஒரே இரவில் ஹீரோ.. யார் இந்த ஃபெரான் டோரஸ்?

கோல்டன் பூட்:

ஒரு உலகக் கோப்பை சீசனில் அதிக கோல் அடித்தவர்களுக்கு கோல்டன் பூட் வழங்கப்படும். அதன்படி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான கோல்டன் பூட் விருதை பிரான்சின் கைலியன் எம்பாப்பே வென்றுள்ளார். இந்த ஃபிஃபா உலகக் கோப்பையில் எம்பாப்பே 10 கோல்களுடன் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்ந்தார். இதுமட்டுமின்றி, அணிக்காக 4 கோல்கள் அடிக்கவும் உதவி செய்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோல்டன் பந்து:

ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரிக்கு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் தனது சிறந்த செயல்பாட்டிற்காக ரோட்ரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அணியின் வெற்றிக்கு ரோட்ரி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். ரோட்ரி ஸ்பெயின் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார்.

கோல்டன் க்ளோவ்ஸ்:

ஸ்பெயின் கோல்கீப்பர் உனை சிமியோனுக்கு 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான கோல்டன் க்ளோவ்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. உனை சிமியோன் அந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டார். 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் உனை சிமியோன் பெல்ஜியத்திற்கு எதிராக ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மற்ற போட்டிகளில் எந்த அணியாலும் ஸ்பெயினுக்கு எதிராக கோலை பதிவு செய்ய முடியவில்லை. உனை சிமியோனின் அசைக்க முடியாத சுவர், எதிரணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

ALSO READ: வெற்றி களிப்பில் துள்ளிய ஸ்பெயின்.. கோபத்தில் அர்ஜென்டினா வீரர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

சிறந்த இளம் வீரர்:

ஸ்பெயினின் பாவ் குபார்சி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் சிறந்த இளம் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீரரான குபார்சி, ஸ்பெயின் விளையாடிய 8 போட்டிகளிலும் முக்கியப் பங்காற்றினார். உலகக் கோப்பை வரலாற்றில் இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பாவ் குபார்சி பெற்றார். வெறும் 19 வயது மற்றும் 178 நாட்கள் மட்டுமே ஆன குபார்சி இந்த விருதை வென்றார்.

Follow Us