AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: கோலியின் ஸ்டைலிஷ் அரைசதம்.. இந்திய அணி எளிதாக இலக்கை விரட்டி வெற்றி!

New Zealand vs India 1st ODI: இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் களமிறங்கிய ரோஹித் சர்மா 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடிதளமிட்டார். 

IND vs NZ: கோலியின் ஸ்டைலிஷ் அரைசதம்.. இந்திய அணி எளிதாக இலக்கை விரட்டி வெற்றி!
சுப்மன் கில் - விராட் கோலிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 Nov 2026 16:00 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று அதாவது 2026 நவம்பர் 4ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இந்திய அணி (Indian Cricket Team) பேட்டிங்கில் களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக, இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் களமிறங்கிய ரோஹித் சர்மா 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடிதளமிட்டார்.

ALSO READ: கடைசி 2 ஒருநாள் போட்டியில் விளையாடாதது ஏன்..? கேப்டன் கில் விளக்கம்!

மழையால் அடிக்கடி தடைப்பட்ட போட்டி:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறைப்படி இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, மழையின் காரணமாக பலமுறை தடைபட்டது. இதன் காரணமாக, டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறைப்படி இந்திய அணிக்கு திருத்தப்பட்ட இலக்கு (32 ஓவர்களில் 143 ரன்கள்) நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டியடித்ததில், விராட் கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து இந்திய அணிக்காக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதில் 13 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும்.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தீர்மானித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 40.2 ஓவர்களில் வெறும் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் சீஃபர்ட் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 38 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். 11-வது வீரரான பிளேயர் டிக்னரும் 34 ரன்கள் எடுத்து, அணி 150 ரன்களைக் கடக்க முக்கியப் பங்களிப்பை வழங்கினார். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்காக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய அணியின் அற்புதமான சேஸிங்:

இந்தியாவின் சேஸிங் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா (0) ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியும் சுப்மன் கில்லும் இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் (104 பந்துகள்) சேர்த்தனர். 114 ரன்களில் கில் ஆட்டமிழந்தபோது அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. கில் 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 37 ரன்கள் எடுத்தார். சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் வெளியேறினார். 124 ரன்களில் மூன்றாவது விக்கெட் வீழ்ந்தது. பேட்டிங் செய்ய வந்த அக்சர் படேல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது, இந்திய அணி 124 ரன்கள் எடுத்திருந்தது.

ALSO READ: பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் நீங்கி விளையாட தகுதி.. நியூசிலாந்து தொடரில் விளையாடுவாரா?

தொடர்ந்து ஆடிய இந்தியா, 136 ரன்களில் தனது 5வது விக்கெட்டை இழந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் (15) ஆட்டமிழந்தார். பின்னர், கே.எல். ராகுல் (03) மற்றும் நமன் தீர் (05) ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 7 ரன்கள் (6 பந்துகளில்) சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால், இந்திய அணி 22.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

Follow Us