43 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே படம் – படக்குழு வெளியிட்ட பதிவு!
43 Years Of Thoongathey Thambi Thoongathey Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் தூங்காதே தம்பி தூங்காதே. இந்தப் படம் தற்போது 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
தமிழ் சினிமாவில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய கமல் ஹாசன் (Actor Kamal Haasan) பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக நடித்து வரும் இவர் இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் பல இளம் தலைமுறையினருக்கு போட்டியாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து தற்போதும் நாயகனாக நடித்து வரும் நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான படம் தூங்காதே தம்பி தூங்காதே.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இந்த தூங்காதே தம்பி தூங்காதே படத்தை இயக்கி உள்ள நிலையில் பஞ்சு அருணாச்சலம் திரைக்கதையை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கமல் ஹாசனின் பலப் படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




43 ஆண்டுகளை நிறைவு செய்தது தூங்காதே தம்பி தூங்காதே படம்:
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஏவிஎம் புரடெக்ஷன்ஸ் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் தூங்காதே தம்பி தூங்காதே என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Suriya: என்னுடன் 3 படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.. நஸ்ரியா குறித்து பேசிய சூர்யா!
தூங்காதே தம்பி தூங்காதே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Celebrating 43 years of #Thoongatheythambithoongathey💥
#AVMProductions #SPMuthuraman #KamalHaasan https://t.co/ZG66tJa0N0
— AVM Productions | AVM Studios (@avmproductions) November 4, 2026
Also Read… இது என்ன புதுசா இருக்கு.. திருந்துங்கடா அகாடமி டாஸ்கில் வாய் தகராறில் முனியம்மாள் – டிடிஃஎப் வாசன்!