பிக் பாஸ் லக்ஸூரி பட்ஜெட் ஷாப்பிங்.. முனியம்மாளால் கலகலப்பு – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss Luxury Budget Task: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக மற்றும் பல்வேறு விமர்சனங்களை கடந்தும் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் ஷாப்பிங்கில் முனியம்மாளால் கலகலப்பாக இருக்கும் பிக் பாஸ் வீடு தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் பிரபலமானதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). 2026ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், தற்போதுவரை சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் கரீஷ்மா (Karishma) வெளியேற்றப்பட்டிருந்தார். அந்த விதத்தில் தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்களே மீதம் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அதிகம் வாக்குகள் என்னைகை பெற்று டிடிஃஎப் வாசன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரத்தின் தொடக்கமே ஜேசன் மற்றும் முனியம்மாள் சண்டையிலே தொடங்கியிருந்தது.
மேலும் இந்த வாரத்திற்கான பிக் பாஸ் லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் (Bigg Boss Luxury Budget Task) நடந்துள்ள நிலையில், அதில் முனியம்மாள் மற்றும் அஸ்மிதா இருவருமே பங்குபெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த டாஸ்கின்போது முனியம்மாளால் பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருந்தது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!
லக்ஸூரி பட்ஜெட் டாஸ்கில் முனியம்மாளால் கலகலப்பு:
கடந்த வாரத்தில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது முனியம்மாள் வரும் வாரத்தில் லக்ஸூரி பட்ஜெட் டாஸ்கில் பங்குபெறுவதாக கூறியிருந்தார். அந்த வகையில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்கில் முனியம்மாள் பங்குபெற்றுள்ளார். அஸ்மிதா, பொருட்களை பார்த்து சொல்ல முனியம்மாள் வேகமாக எழுத தொடங்கியிருந்தார்.
இதையும் படிங்க: நக்கலாக பேசிய முனியம்மாளிடம் ஆநாகரீகமாக நடந்துகொள்ளும் ஜேசன் – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ!
அவர் அஸ்மிதாவிடம் மெதுவாக சொல்லு மா என கூறியும் கலகலப்பாக இந்த பொருட்களை எழுத தொடங்கியிருந்தார். மேலும் இந்த ப்ரோமோவில் அஸ்மிதா சொல்வதற்கு மாறாக முனியம்மாள் எழுதும் நிலையில், அது சக போட்டியாளர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 57வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day57 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/MHsba7wd2V
— Vijay Television (@vijaytelevision) November 2, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 9வது வாரத்தில் உள்ளது. இந்த வாரத்தின் வீட்டின் தலைவராக லக்ஷ்மி பிரியா இருப்பதாக தெரிகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்திற்கான டீம் டாஸ்க் இன்னும் தொடங்கவில்லை. அப்படி இந்த வாரத்தில் எப்படிப்பட்ட டீம் டாஸ்க் இருக்கும், யார் யார் நாமினேஷனில் இடம்பெறுவார்கள் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.