பூஜையுடன் தொடங்கியது நடிகர் ராம் சரணின் 17-வது படம்… வைரலாகும் வீடியோ
Ram Charans 17th film pooja ceremony | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் உருவாகும் 17-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ராம் சரண் (Actor Ram Charan). இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுப்பதற்காக கடினமாக உழைத்து வந்தார். பிறகு கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி மற்ற மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான மஹதீரா படத்திற்கு பிறகு பலப் படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பெத்தி. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு உலக அளவில் ரசிகர்கள் இதனை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.




பூஜையுடன் தொடங்கியது நடிகர் ராம் சரணின் 17-வது படம்:
இந்த நிலையில் நடிகர் ராம் சரண் தனது 17-வது படத்திற்காக தற்போது இயக்குநர் சுகுமாரன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைப்பெற்றது. மேலும் படத்தின் பூஜையில் கலந்துகொண்ட ராம் சரணின் தந்தை நடிகர் சிரஞ்சீவி படத்தினை தொடங்கி வைத்தார். அது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… டாஸ்கின்போது பேனிக்-ஆன அக்ஷிதா.. பிக் பாஸில் பரபரப்பு – வைரலாகும் ப்ரோமோ!
ராம் சரண் 17 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The journey of #RC17 begins with the MEGA CLAP ❤️
Megastar @KChiruTweets garu sounded the clapboard and blessed the entire team of #RC17 ✨
#YouCanImagine #RC2Sukku
#SRCMega Power Star @AlwaysRamCharan Master Storyteller @aryasukku @MythriOfficial @SukumarWritings #TSeriesFilms @RC17Offl
— Mythri Movie Makers (@MythriOfficial) November 1, 2026
Also Read… ஜி.வி.பிரகாஷின் குரலில்.. துல்கர் சல்மானின் ஏஒடி படத்திலிருந்து ‘ராதே ராதே’ பாடல் வெளியீடு!