AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜன நாயகனுக்கு பிறகு எச்.வினோத் என்ன செய்கிறார்? வைரலாகும் தகவல்

Director H Vinoth Next Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் எச் வினோத். இவர் அடுத்ததாக உருவாக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

ஜன நாயகனுக்கு பிறகு எச்.வினோத் என்ன செய்கிறார்? வைரலாகும் தகவல்
எச். வினோத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Nov 2026 18:25 PM IST

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களின் படங்களை இயக்கி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் எச்.வினோத் (Director H Vinoth). இவர் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே சரியான கவனத்தைப் பெறவில்லை என்றாலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிறகு ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை பல இடங்களில் இந்தப் படம் எடுத்துக்காட்டாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு மற்றும் ஜன நாயகன் என தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான ஜன நாயகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் தளபதி விஜயின் நடிப்பில் உருவான இறுதிப் படத்தை இயக்கியவர் என்ற பெருமையும் தற்போது இயக்குநர் எச். வினோத்தையே சாரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் எச் வினோத் என்ன செய்கிறார் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

ஜன நாயகனுக்கு பிறகு எச்.வினோத் என்ன செய்கிறார்?

ஜன நாயகன் படத்திற்குப் பிறகு, சூர்யாவுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் எச். வினோத் ஒரு வருடத்தைச் செலவிட்டார். அவர் முதலில் ஒரு முழுமையான திரைக்கதையைச் சமர்ப்பித்தார். அதில் திருத்தங்கள் செய்து, இரண்டாவது முறையாக மற்றொரு திரைக்கதையைச் சமர்ப்பித்தார். இருப்பினும், அது சூர்யாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் அந்தத் திரைக்கதை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது, ​​சூர்யா 49 திரைப்படம் வேறொரு இயக்குநரிடம் செல்ல வாய்ப்புள்ளது. இதற்கிடையில், தீரன் 2 படத்திற்கான கருவை உருவாக்கி, கதையை மேம்படுத்தி, கார்த்தியை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு எஸ்.ஆர். பிரபு, எச். வினோத்திடம் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read… மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இது ஒரு தொடர்கதை அல்ல… ஓம் படம் பார்ட் 2 உருவாகுமா என்பது குறித்து ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

Follow Us