AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sundar C: அதற்காக மட்டும் நான் படம் எடுக்கும் ஆள் கிடையாது.. வெளிப்படையாக சுந்தர் சி பகிர்ந்த விஷயம்!

Sundar C Speech: தென்னிந்திய சினிமாவில் நடிகராக, இயக்குனராக மற்றும் தயாரிப்பாளராக மக்களிடையே பிரபலமானவர் சுந்தர் சி. இவரின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், அவர் படம் இயக்குவது குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Sundar C: அதற்காக மட்டும் நான் படம் எடுக்கும் ஆள் கிடையாது.. வெளிப்படையாக சுந்தர் சி பகிர்ந்த விஷயம்!
சுந்தர் சிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2026 19:04 PM IST

தமிழில் மக்கள் மத்தியில் ஹாரர் கலந்த காமெடி திரைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சுந்தர் சி (Sundar C). இவர் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, கமல்ஹாசன் (Kamal Haasan) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நடிகராகவும் திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில், இறுதியாக இவரின் நடிப்பில் கேங்கர்ஸ் என்ற படமானது வெளியானது. இந்த படத்திற்கு பின் இவர் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படம் மற்றும் புருஷன் போன்ற திரைப்படங்களில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் சுந்தர் சி இயக்குநராக பணியாற்றி, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2.

இந்த படத்தில் நயன்தாரா முன்னணி நாயகியாக நடித்துள்ள நிலையில், 2026 நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சுந்தர் சி, தான் ஒரு கதையை எதற்காக எடுக்கிறேன் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜாவின் கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்!!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி:

அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய சுந்தர் சி, அதில் “எனக்கு என்னைக்குமே, ஒரு ஹீரோவுக்கு தேதிகள் இருக்கு, அதற்காக ஒரு படம் பண்ணலாம் என எனக்கு படம் இயக்க வராது. எனக்கு ஒரு ஐடியா.. இந்த படம் நன்றாக இருக்கும் என்று எனக்கு ஒரு யோசனை வைத்தால், அதையே ஒரு படமாக எடுத்திருக்கிறேன். அதற்க்கு தகுதியான நடிகர்களை கொண்டு படமாக இயக்கியிருக்கிறேன். அதுபோலவே நானும் ஏற்கனவே ஒரு ஐடியா வைத்திருந்தேன்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட பென்ஸ் படக்குழு!

அம்மன் படம் போல இல்லாமல் இன்னொரு மாதிரி.. அதன் பிறகு ஐசரி கணேஷ் சார் நீங்கள் ஏன் மூக்குத்தி அம்மன் 2 படமாக பண்ணக்கூடாது என என்னிடம் கேட்டார். அதன் பிறகே இந்த டைட்டிலுடன் இந்த படம் ஒத்துப்போகும் என சொல்லி இந்த படத்தை பண்ண ஆரம்பிதோம். அது ஒரு தெய்வீக சக்தி போல உணர்ந்தேன். மேலும் மூக்குத்தி அம்மன் 1 படத்திற்கும் பார்ட் 2 படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என அதில் அவர் கூறியிருந்தார் .

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நயன்தாரா, ஊர்வசி, ரெஜினா, சுனில், யோகி பாபு, சிங்கம் புலி, சினேகா, குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் நடிகை நயன்தாரா போலீஸ் மற்றும் அம்மன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படமானது பேண்டஸி மற்றும் தெவீகம் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us