நிஜமாகவே அன்லக்கிதான் போல.. பிக் பாஸில் ரூட் எடுக்கும் புது லவ் ஸ்டோரி – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss 10 Tamil Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரத்தில் இந்நிகழ்ச்சியில் கவ்பாய்ஸ் மற்றும் மாஃபியா என இரு அணிகளாக பிரிந்து அந்த டாஸ்கானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியில் புது காதல் ஜோடி ஒன்று முளைத்துள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமாகி தமிழில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் இந்நிகழ்ச்சியானது தமிழில் ஆரமபமான நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியானது மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கியிருந்த நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி மற்றும் எவிக்ஷன் எல்லாவற்றையும் கடந்து தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து சிறப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் குயிக் கன் கவ்பாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ் என்ற டாஸ்க்கானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அவர் அவர் அணி மற்றும் மற்ற அணியினருடனும் சண்டையிட்டு தங்களின் டாஸ்குகளை செய்துவருகிறார்கள். அந்த விதத்தில் இந்த டாஸ்கின்போது பிக் பாஸில் புது லவ் ஸ்டோரி ஒன்று தொடங்கியுள்ளது. முகேஷ் மற்றும் அக்ஷிதா இருவரும் கொஞ்சி பேசுவது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என்ன சொல்வதென்றே தெரியல.. பெடி பட தனது கதாபாத்திரத்தின் மீது எழுந்த விமர்சனம் குறித்து ஜான்வி கபூர் ஓபன்!
பிக் பாஸில் கொஞ்சி கொஞ்சி பேசும் முகேஷ் – அக்ஷிதா:
8வது வாரம் தொடங்கியதிலிருந்து அக்ஷிதா மற்றும் முகேஷ் இருவரிடையேயும் நெருக்கம் அதிகமாக இருக்கிறது என கூறலாம். காதலா? நட்பா? என இவர்களின் பேச்சு மற்றவர்களை சந்தேகப்படுத்திவருகிறது. முகேஷுடன் சாதிகா நெருக்கமாக இருந்த நிலையில், தற்போது அவர் அவருடன் இல்லாமல் தனியாகவே இருப்பதுபோல உள்ளது.
இதையும் படிங்க: இளையராஜாவின் கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்!!
தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில், அக்ஷிதா, டப் டாஸ்க் ஒன்றில், தான் சரியாகவே செய்யவில்லை என்றும், தான் இருக்கும் அணிய எப்போதும் தோல்வியில்தான் இருக்கும் என்றும் முகேஷிடம் கொஞ்சி கொஞ்சி பேசியிருந்தார். அந்த விதத்தில் அவர்கள் இருவரும் பேசியது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 53வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day53 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/ETCk4Hfch6
— Vijay Television (@vijaytelevision) October 29, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது கவ்பாஸ் மற்றும் மாஃபியாஸ் டாஸ்க்குடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த டாஸ்கில் தொடர்ந்து கவ்பாய்ஸ் அணியானது பெற்றிபெற்றுவரும் நிலையில், மாஃபியா அணியானது பல முயற்சிகளை செய்தும் தோல்வியில் இருக்கிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்சயானது இந்த வாரத்தில் விறுவிறுப்பாக இருக்கிறது. மேலும் கவ்பாய்ஸ் டீம் இந்த வாரத்தில் இந்த டாஸ்கில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.