AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் கனவிலும் நினைக்கவில்லை… மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் நடிகர் ஊர்வசி பேச்சு!

Actress Urvashi Speech About Mookuthi Amman 2 Movie | தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பட விழா நடிகை ஊர்வசி மூக்குத்தி அம்மன் 2 குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் கனவிலும் நினைக்கவில்லை… மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் நடிகர் ஊர்வசி பேச்சு!
நடிகர் ஊர்வசிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2026 07:45 AM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி (Actress Urvashi). தென்னிந்திய மொழிகளில் 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் மலையாள சினிமாவில் சமீபத்தில் நடிகை ஊர்வசி நடிப்பில் வெளியான ஆஷா படம் மலையாள சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை ஊர்வசி.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் விழாவில் நடிகை ஊர்வசி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் கனவிலும் நினைக்கவில்லை… நடிகர் ஊர்வசி பேச்சு:

அதன்படி நடிகை ஊர்வசி பேசியதாவது, உண்மையைச் சொல்லப்போனால், இதை ஒரு இரண்டாம் பாகம் என்று கூடச் சொல்ல முடியாது. முதல் பாகத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தில் நான் நடித்தபோது, ​​அதற்கு ஒரு இரண்டாம் பாகம் வரும் என்றோ, அதில் நான் ஒரு அங்கமாக இருப்பேன் என்றோ கனவிலும் நினைத்ததில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ரோடி தீம் வீடியோ

Follow Us