ஊர்வசி – இந்திரன்ஸ் நடிப்பில் இந்த ஜலதாரா பம்ப் செட் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Jaladhara Pumpset Since 1962 Movie OTT Reivew | மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் ஊர்வசி மற்றும் இந்திரன்ஸ். இவர்களின் நடிப்பில் வெளியான ஜலதாரா பம்ப் செட் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று தர்போது பார்ப்போம்.
மலையாள சினிமாவில் வெர்சடைல் ஆக்டராக வலம் வருபவர்கள் நடிகர்கள் ஊர்வசி மற்றும் இந்திரன்ஸ். இதில் ஊர்வசி பல ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் சினிமாவிலும் அதிக அளவில் தமிழ் சினிமாவிலும் நடித்து உள்ளார். தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வரும் நடிகர்கள் ஊர்வசி மற்றும் இந்திரன்ஸ் இருவரும் இணைந்து நடித்தப் படங்களில் ஒன்று ஜலதாரா பம்ப் செட் சின்ஸ் 1962. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஆஷிஷ் சின்னப்பா எழுதி இயக்கி இருந்தார். கிண்டல் கலந்த நகைச்சுவை-நாடகம் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி நடிகர்கள் சனுஷா, சாகர் ராஜன், ஜானி ஆண்டனி, டி.ஜி. ரவி, விஜயராகவன், நிஷா சாரங், ஜெயன் சேர்த்தலா, அல்தாப் சலீம், சிவாஜி குருவாயூர், சஜின் செருகாயில், கலாபவன் ஹனீப், அடில் புருனோ, விஷ்ணு கோவிந்தன், தாவிஞ்சி சந்தோஷ், தங்கச்சன் விதுர, ஜோஷி மேடயில், அஞ்சலி சுனில் குமார், சினேகா பாபு, நிதா கர்மா, ஷைலஜா அம்பு மற்றும் ஸ்ரீ ரம்யா ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜலதாரா பம்ப் செட் சின்ஸ் 1962 படத்தின் கதை என்ன?
ஆசிரியர்களாக இருக்கிறார்கள் ஊர்வசி மற்றும் அவர்து கணவர். ஒரு நாள் இரவு வீட்டில் மோட்டர் போட்டுவிட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கும் ஊர்வசி வேலை முடிந்தது மோட்டரை ஆஃப் செய்துவிட்டு உறங்க செல்கிறார். அந்த நேரத்தில் ஊர்வசி வீட்டின் கிணத்துக்குள் இருக்கும் மோட்டரை திருட வந்துள்ளார் இந்திரன்ஸ்.




Also Read… ஜன நாயகன் படத்தில் வில்லனாக பாபி தியோலை நடிக்க வைக்க என்ன காரணம்? இயக்குநர் ஓபன் டாக்
அவர் மோட்டரை திருட பைப்பை அறுத்துக்கொண்டு இருக்கும் போதே அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு கிணத்தை எட்டிப்பார்த்து அவர் திருடுவதை கண்டுபிடிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து போலீஸை அழைத்து வழக்கு போடப்படுகின்றது. அந்த வழக்கு 20 வருடங்களைக் கடந்தும் தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடர்கிறது. மேலும் ஊர்வசியின் கணவர் மரணமடைந்து ஊர்வசி அந்த வழக்கிறகாக அழைந்து வருகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பராசக்தி படத்திற்கு வில்லனாக ரவி மோகன் முதல் சாய்ஸ் இல்லை – தயாரிப்பாளர் ஓபன் டாக்!