மாஸாகவும்… க்ளாஸாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது!
10 Years Of Kabali Movie | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கபாலி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்ச ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கபாலி. இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்கிய இந்தப் படம் கடந்த 22-ம் தேதி ஜூலை மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி நடிகர்கள் ராதிகா ஆப்தே, வின்ஸ்டன் சாவோ, தன்சிகா, தினேஷ், கிஷோர், ஜான் விஜய், கலையரசன், ரோஸ்யம் நோர், ரித்விகா, நாசர், சங்கிலி முருகன், மைம் கோபி, சார்லஸ் வினோத், ஆர்.அமரேந்திரன், வனேசா குரூஸ், லிஜீஷ், ஹரி கிருஷ்ணன், விஸ்வந்த், கஜராஜ், ராமா, சம்பத் ராம், உதய் மகேஷ், நந்தகுமார், கேப்ரியல்லா செல்லஸ்,ரமேஷ் திலக், டார்க்கி நாகராஜா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், நார்மன் ஹக்கீம், சாக் தைபன் மற்றும் யாங்க் காசிம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




கபாலி படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது:
கபாலி படத்தில் ரஜினிகாந்த் மலேசியாவில் ஒரு பெரிய கேங்ஸ்டராக நடித்து இருந்தார். 25 ஆண்டுகளாக ஒரு பொய் வழக்கில் சிக்கி சிறையில் இருந்து வெளியே வரும் கபாலி தான் சிறை செல்லவும் தனது மனைவி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்தவர்களை தேடித் தேடி பழிவாங்குகிறார். அந்த பழிவாங்கும் படலத்தின் போது தனது மகள் மற்றும் மனைவி உயிருடன் இருப்பதை அறிந்து கொள்கிறார். அதன் பிறகு என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை படத்தின் தயாரிப்பாளர் போஸ்ட் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்.
Also Read… யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியான ‘தடுமாறுதே’ வீடியோ பாடல்!
கபாலி பட தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
மகிழ்வுறும் நன்னாள் 🌸
Superstar @rajinikanth#PaRanjith @Music_Santhosh @Cinemainmygenes @anbariv #Murali @RamalingamTha @radhika_apte @SaiDhanshika #Kishore #Dinesh @KalaiActor @Dbcinemalive @RIAZtheboss @thinkmusicindia @APIfilms@malikstreams#Paranthaman #Kalaprabu… pic.twitter.com/6SP9WD4Lr4— Kalaippuli S Thanu (@theVcreations) July 22, 2026
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷின் ஓம் பட ஷூட்டிங்… வைரலாகும் தகவல்