யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியான ‘தடுமாறுதே’ வீடியோ பாடல்!
Toxic Movie Thadumaarudhe Song : கன்னட சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பிலும், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்திலும் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக். தற்போது இப்படத்தின் 2-வது பாடலான தடுமாறுதே என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பான் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டுவரும் நாயகன்தான் யாஷ் (Yash). இவரை ரசிகர்கள் அன்போடு ராக்ஸ்டார் என அழைத்துவருகிறார்கள். இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கேஜிஎப் (KGF) என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா வரையிலும் பிரபலமானார். இதையடுத்து கேஜிஎப் 2 படத்தையும் நடித்து ஹிட் கொடுத்தார். இந்நிலையில் இவரும், இயக்குநர் கீது மோகன்தாஸும் (Geetu Mohandas) இணைந்து உருவாக்கிய புது திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இதை முழுவதும் பெண்ணியம் மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தை மையாமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து “தபாஹி” என்ற பாடல் வெளியாகியிருந்தது. அதையடுத்து, தற்போது, “தடுமாறுதே” (Thadumaarudhe) என்ற புது வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் யாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: அமரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – வாழ்த்து தெரிவித்த சாய் பல்லவி!
நடிகர் யாஷ் பகிர்ந்த டாக்ஸிக் பட தடுமாறுதே வீடியோ பாடல் குறித்த பதிவு:
Love begins where reason ends…
Video Song Out Now!Kannada #Manamohaka – https://t.co/CRLYjPc2VH
Hindi #Madhosh – https://t.co/o0tzGAvPQY
Telugu #Manasagadhe – https://t.co/F6LmWPBAhL
Tamil #Thadumaarudheyyy – https://t.co/ssO9B4Xafz
Malayalam #MadhuMohini -…
— Yash (@TheNameIsYash) July 21, 2026
டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது:
யாஷின் டாக்ஸிக் படமானது பான் இந்திய மொழிகளில் உருவிக்கப்பட்டுள்ளது. இதை பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள நிலையில், ஹாலிவுட் பட ரேஞ்சில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அதிலும், நயன்தாரா இதில் கொஞ்சம் நெகடிவ் வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிக வன்முறை மற்றும் ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், இதற்கு ஏ தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாட்டி சொல்லைத் தட்டாதே படம் 38 ஆண்டுகளைக் கடந்தது!
இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் ட்ரெய்லர் ரிலீஸ் விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதன் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.