AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாட்டி சொல்லைத் தட்டாதே படம் 38 ஆண்டுகளைக் கடந்தது!

38 Years Of Paatti Sollai Thattathe Movie | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பாட்டி சொல்லைத் தட்டாதே படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 38 ஆண்டுகளைக் கடந்த நிலையில் படக்குழு பதிவு வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாட்டி சொல்லைத் தட்டாதே படம் 38 ஆண்டுகளைக் கடந்தது!
பாட்டி சொல்லைத் தட்டாதேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2026 13:30 PM IST

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90-களில் வெளியான காமெடி ட்ராமா படங்கள் பல தற்போது வரை ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கட்னத 21-ம் தேதி ஜூலை மாதம் 1988-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாட்டி சொல்லைத் தட்டாதே. காமெடி ட்ராமா பணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் மனோரமா, பாண்டியராஜன், ஊர்வசி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன், செந்தில், ஆனந்தராஜ் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் மு. சரவணன், எம்.பாலசுப்ரமணியன் மற்றும் எம்.எஸ். குகன் ஆகியோர் தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாட்டி சொல்லைத் தட்டாதே படம் 38 ஆண்டுகளைக் கடந்தது:

பெற்றோர்களை இழந்த தனது பேரனை வளர்த்து வருகின்றனர் தாத்தாவும் பாட்டியும். கிராமத்தில் மிகவும் பணக்காரர்களாக உள்ள அவர்கள் குடும்பத்தில் பாட்டியின் பேச்சிற்குதான் அதிக மரியாதை இருக்கும். அவர் சொல்வதுதான் அந்த வீட்டில் இறுதி முடிவாக இருக்கும் அந்த பாட்டி கதாப்பாத்திரத்தில் பழம்பெரும் நடிகை மனோரமா நடித்து இருந்தார்.

இவரின் பேரணாக நடிகர் பாண்டியராஜன் நடித்து இருந்தார். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த படமாக இருக்கும். இதில் வரும் ஒரு கார் பல மாயாஜாலங்களை செய்து ரசிகர்களை திரைக்குள் இழுக்கும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழு அதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.

Also Read… AK64 படத்தின் ஷூட்டிங்கில் எப்போது இணைவார் அஜித்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

பாட்டி சொல்லை தட்டாதே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நோ ரஜினிகாந்த்… நோ சிம்பு… இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக இயக்கும் நடிகர் இவரா?

Follow Us