Nivin Pauly: நிவின் பாலியின் ஏழு மலை ஏழு கடல் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட்!
Yezhu Kadal Yezhu Malai Teaser Release Date: தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் நிவின் பாலி. இவர் இயக்குநர் ராம் இயக்கத்தில், தமிழில் நடித்துள்ள புதிய படம்தான் ஏழு மலை ஏழு கடல். அதிரடி திரில்லர் மற்றும் பேண்டஸி கதைக்களம் கொண்டபடமாக உருவாகியுள்ள நிலையில், இதன் டீசர் எப்போது வெளியாகும் என நிவின் பாலி அறிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் சர்வம் மாயா (Sarvam Maya). கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது, தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் தயாரிப்பாளர் ரியா ஷிபு நாயகியாக நடித்திருந்த நிலையில், அவருடன் நடிகை பிரீத்தி முகுந்தனும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பின் பெத்தலகேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்துவந்தார்.
இப்படங்களை முன் கிட்டத்தட்ட 3 ஆண்டுக்கு முன், இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் நிவின் பாலி நடித்த படம்தான் “ஏழு மலை ஏழு கடல்” (Yezhu Kadal Yezhu Malai). பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!
நிவின்பாலியின் ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது:
இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்க, நடிகர் சூரி நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், அதில் எலியை மையமாக கட்டப்பட்டிருந்தது. மேலும் இதில் நடிகரை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்!
இப்படம் உருவாக்கி கிட்டதட்ட 3 முதல் 4 வருடங்களான நிலையில், இதன் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 20ம் தேதியில், மாலை 6:33 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மலை ஏழு கடல் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Director Ram’s #YezhuKadalYezhuMalai Release Date Announcement Teaser will be streaming from tomorrow at 6:33 PM. Stay tuned.#DirectorRam @yoursanjali @sooriofficial @thisisysr @sureshkamatchi @vhouseofficial #7SeasandHillsFilms @madhankarky #SanthoshDhayanidhi… pic.twitter.com/n0ltgvkP8v
— Nivin Pauly (@NivinOfficial) July 19, 2026
இந்த படத்தை இயக்குனநர் ராம் இயக்க, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் காதல், கடமை மற்றும் ஒரு இளைக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதற்க்கு இசையமித்துஞனின் வாழ்வியல் போன்ற பேண்டஸி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாள்ள நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.