Soori: மண்டாடியும் வருவான்.. சூரியின் மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
Mandaadi Mandaadi Song: நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மண்டாடி. அதிரடி கடற்கரை மற்றும் கப்பல் போட்டி தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான மண்டாடி மண்டாடி என்ற பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கி, தற்போது லீட் ஹீரோவாக படங்களில் நடித்துவருபவர் சூரி (Actor Soori). இவர் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் வெளியான விடுதலை 1 (Viduthalai Part 1) என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து படங்களில் கதநாயகனாகவே நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியில் மாமன் என்ற படமானது வெளியானது. கடந்த 2025ம் ஆண்டில் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் (Prashanth Pandiaraj) இயக்கத்தில் வெளியான படத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி நடித்துவந்த புது திரைப்படம்தான் மண்டாடி (Mandaadi). இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கிவந்தார்.
அதிரடி ஆக்ஷன் கப்பல் ரேஸ் மற்றும் கடற்கரை கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மண்டாடி மண்டாடி என்ற ரேப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு கொடுத்த சென்சார் அப்டேட்!
மண்டாடி படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Before the sea roars, hear its rhythm 🌊❤️🔥#MandaadiMandaadi Promo Song out now 🔥🥁https://t.co/0uXnT1mqVa – TAMILhttps://t.co/bG9vfUnHFb – TELUGU#Mandaadi in theatres from September 10 ⚓🎬@sooriofficial #Suhas @elredkumar@rsinfotainment @MathiMaaran @gvprakash… pic.twitter.com/rt4KyjxLb9
— Actor Soori (@sooriofficial) July 18, 2026
சூரியின் மண்டாடி படத்தில் அவருடன் நடிகர் சுஹாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக இளம் நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் சத்யராஜ், பாலா சரவணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அதிரடி கதைக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படமானது உருவாகியுள்ளது.
மண்டாடி படத்துடன் மோதும் பான் இந்திய படங்கள்:
சூரியின் மண்டாடி திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகிறது. இப்படத்துடன் விஜய் தேவரகொண்டாவின் ரணாபாலி படமும் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 11ம் தேதியில் வெளியாகிறது.
இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலிஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
மேலும் இப்படங்களுக்கும் போட்டியொயாக தமிழில் உருவாகியுள்ள படம்தான் டிமாண்டி காலனி 3. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி இப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.