Mandaadi: டோலிவுட் நடிகர் சுஹாஸின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட மண்டாடி படக்குழு!
Suhas Introduction Video: நடிகர் சூரியின் நடிப்பில் முழுக்க முழுக்க கடல் சார்ந்த ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவரும் படம்தான் மண்டாடி. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில், இப்படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் சுஹாஸின் கேரக்டர் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சுஹாஸ் (Suhas). இவர் டோலிவுட் சினிமாவில் சிறப்பான நடிகராக நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழில் அறிமுகமாகியுள்ள முதல் திரைப்படம்தான் மண்டாடி (Mandaadi). இப்படத்தில் தமிழ் நடிகரான சூரி (Soori) உச்ச நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மகிமா நம்பியார் (Mahima Nambiar) நாயகியாக நடித்துவர்ந்தார். இதை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது.
அதன் படியாக இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்க, வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் சூரிக்கு இணையாக நடிகர் சுஹாஸ் வில்லனாக நடிக்கிறார். அந்த வகையில், சுஹாஸின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: எப்புட்றா இவகூட நாளு வருஷம் ரிலேஷன்ஷிப்ல இருந்த – வெளியானது லவ் ஓ லவ் படத்தின் ட்ரெய்லர்
மண்டாடி படத்தில் நடிகர் சுஹாஸ் நடித்த கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது:
Every clan has a force that leads the way⚡
Meet #Suhas as Saattapuli from the Sammatti Clan in #Mandaadi 🌊♥️https://t.co/jfkMLuKNVM#Suhas @elredkumar@rsinfotainment @MathiMaaran @gvprakash @Mahima_Nambiar@RavindraVijay1 @MithunJS5#sathyaraj @bala_actor @PeterHeinOffl… pic.twitter.com/h7YhEX2aNw— Actor Soori (@sooriofficial) June 26, 2026
இப்படத்தில் நடிகர் சுஹாஸ், சாட்டப்புலி என்ற வேடத்தில் நடித்துள்ளாராம். சம்மட்டி வகையறா என்ற பரம்பரட்டியை சார்ந்த சாட்டப்புலி என்ற வேடத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
மண்டாடி படத்தின் கதைக்களம் என்ன:
இந்த மண்டாடி படத்தில் சூரி மற்றும் சுஹாஸ் இருவரின் கதாபாத்திரமே மெயின் கதாபாத்திரம். இதில் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார். இப்படமானது கடற்கரை கப்பல் போட்டி மற்றும் அங்கு நடக்கும் கேங்ஸ்டர்ஸ் சண்டைகள் போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குட் டாக்டர் வெப் தொடரின் கதையில் உருவாகிறதா ரஜினியின் தர்மன் திரைப்படம்? அஸ்வத் மாரிமுத்து சொன்ன பதில் என்ன தெரியுமா?
இப்படமானது சூரியின் வாழ்நாளிலே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படமானது சூரியின் நடிப்பில் 3வது வெளியாகும் படம் என்ற நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கிறது.