AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் அந்த கதாப்பாத்திரத்தின் நடிக்க யோசிக்கல – அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்

Arjun Das Interview is viral on social media | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நான் அந்த கதாப்பாத்திரத்தின் நடிக்க யோசிக்கல – அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்
அர்ஜுன் தாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுன் தாஸ் நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கான் சிட்டி. இந்தப் படம் இன்று ஜூன் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசியதும் கவனத்தை ஈர்த்து வந்தது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நான் அந்த கதாப்பாத்திரத்தின் நடிக்க யோசிக்கல:

நான் ஒருபோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கத் திட்டமிடவில்லை; ஆனால் ‘கைதி’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது, அதுவே எல்லாவற்றையும் மாற்றி அமைத்தது. ஆரம்பத்தில் நான் ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. படப்பிடிப்புக்காகக் குழுவினர் டெல்லி சென்றிருந்தபோதுகூட நான் அந்தப் படத்தில் இல்லை. டெல்லி படப்பிடிப்பு முடிந்த பிறகு, லோகேஷ் சார் என்னை அழைத்து ‘மாஸ்டர்’ படத்தில் இணையுமாறு கேட்டார்; அது மீண்டும் ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்தது. அஜித் குமார் சார் தனது பல படங்களுக்கு என்னைப் பரிந்துரைத்திருந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் திரைப்படங்கள் அமையவில்லை. இறுதியாக, குட் பேட் அக்லி படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கைகூடியது.

Also Read… பேசில் ஜோசஃபின் அதிரடி படம் நிஜமாவே அதிரடியா இருக்கா? ஓடிடி விமர்சனம் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன் – வைரலாகும் ரவி மோகன் பதிவு

Follow Us