தலைவர் 173 படத்திற்காக அஸ்வத் மாரிமுத்துவிடம் கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்
Superstar Rajinikanths Thalaivar 173 Movie Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 173. இந்தப் படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஜன நாயகன் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தால் மற்றொரு பக்கம் தலைவர் 173 படத்தை யார் இயக்குவர் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆம் தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து பல சிக்கள்கள் நிலவி வருகின்றது. அதன்படி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் சார்பாக நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தினை முன்னதாக இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான அருணாச்சலம் படம் மாபெரும் வெற்றியைப் பெற்று இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களில் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரும் இந்தப் படத்தில் நிலைத்து இருக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.




அஸ்வத் மாரிமுத்துவிடம் கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஸ்வத் மாரிமுத்துவை அணுகி, கமல் ஹாசனின் ஒப்புதலையும் பெறும் வகையில் அவரிடமும் கதையை விவரிக்குமாறு கேட்டுக்கொண்டார். கதையைக் கேட்ட பிறகு, கமல் மிகுந்த திருப்தியும் உற்சாகமும் அடைந்தார். இது முழுக்க முழுக்க ரஜினிகாந்திற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த கதை என்றும், அந்தத் தனித்துவமான கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாராலும் கச்சிதமாகப் பொருந்த முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், இத்திட்டத்தை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இன்று மாலை 5 மணிக்கு தலைவர் 173 படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியிட உள்ளது படக்குழு.
Also Read… செப்டம்பரில் வெளியாகும் டிமான்டி காலனி 3 படம் – அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Thalaivar173 – #SuperstarRajinikanth asked #AshwathMarimuthu to narrate the story to #KamalHaasan to get his approval as well. Upon hearing the story, Kamal sir was highly satisfied and excited. He said it is an excellent story that is purely meant for #Rajinikanth; no one other… pic.twitter.com/n3kwU3xAzS
— Movies Singapore (@MoviesSingapore) June 23, 2026
Also Read… எங்கள் ஜன நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட போஸ்ட்