Samantha: விரைவில் ரூ 50 கோடி.. சமந்தாவின் எங்கள் தங்கம் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Engal Thangam Movie: நடிகை சமந்தாவின் கம்பேக் திரைப்படமாக வெளியாகியிருப்பதுதான் எங்கள் தங்கம் (மா இன்டி பங்காரம்). இப்படமானது 2026ம் ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2வது நாள் முடிவில் இப்படம் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
டோலிவுட் சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் நெருக்கமான நாயகியாக இருந்துவருபவர் சமந்தா (Samantha). இவர் கடந்த இரு ஆண்டுகளாக கதாநாயகியாக எந்த படங்களிலுமே நடிக்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினிமாவிலிருந்து சில காலமாக இடைவெளியில் இருந்தார். இந்நிலையில் இந்த 2 வருட இடைவெளியியை உடைக்கும் வகையில், அவர் கொடுத்திருக்கும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததுதான் எங்கள் தங்கம் (Engal Thangam). இப்படமானது தெலுங்கு மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழியிலும் சிறப்பாக வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் நந்தினி ரெட்டி (Nandhini Reddy) இயக்க, சமந்தா மற்றும் அவரின் கணவர் ராஜ் நிதிமோரு (Raj Nidimoru) இணைந்து தயாரித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
திரையரங்குகளில் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது. நிலையில் இப்படத்தின் 2வது நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: லவ் டுடே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தே சிம்பு கணிச்சிட்டாரு – பிரதீப் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
சமந்தாவின் மாஸ் ஆக்ஷன் எங்கள் தங்கம் பட 2வது நாள் வசூல் :
சமந்தா இப்படத்தில் முற்றிலும் ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். அவர் இப்படத்தில் பஸ்சில் சண்டையிடும் காட்சியெல்லாம், அப்படியே மாஸ்டர் பட தளபதியை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த அளவிற்கு அவரின் சண்டை காட்சிகள் இப்படத்தில் உள்ளது.
இதையும் படிங்க: என்னப்பா ரெடியா?.. யாஷின் அதிரடி கேங்ஸ்டர் படமான ‘டாக்ஸிக்’ புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இப்படம் முதல் நாளில் உலகமெங்கும் சுமார் ரூ 13.15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் சுமார் ரூ 28 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. முதல் நாளை ஒப்பிடும்போது, இரண்டாவது நாளில் கூடுதலாக ரூ 5 கோடிகள் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடிவருகின்றனர்.
எங்கள் தங்கம் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து படக்குழு வெளிடியிட்ட பதிவு:
Bangaaram’s Rachcha at the box office 🔥🔥#MaaIntiBangaaram collects a gross of 28 CRORES WORLDWIDE IN 2 DAYS ❤🔥
Watch the BLOCKBUSTER 𝐒𝐀𝐌BHAVAM #MaaIntiBangaaram in theatres today ❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/P89ifZn9Ss@TralalaPictures… pic.twitter.com/Cxb5KDXYCM— Tralala Moving Pictures (@TralalaPictures) June 21, 2026
கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா :
சமந்தா எங்கள் தங்கம் படத்தின் வெற்றியை கடந்த 2026 ஜூன் 20ம் தேதியில் படக்குழுவுடன் இணைந்து கொண்டாடியிருந்தார். அப்போது அவரின் வயிறு பெரிதாக, கர்ப்பமாக இருப்பதுபோலவே இருந்தது. இந்நிலையில் அதற்கு பலரும் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பகிர்ந்துவந்தனர். ஆனால் இது குறித்து சமந்தா என்னும் எதையும் அறிவிக்கவில்லை. விரைவில் ரசிகர்களுக்கு அவர் இனிப்பான செய்தியை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.