AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pradeep Ranganathan: லவ் டுடே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தே சிம்பு கணிச்சிட்டாரு – பிரதீப் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Pradeep Ranganathan About Simbu Prediction: தமிழில் இயக்குநராக நுழைந்து, தற்போது இளம் நாயகனாக திரைப்படங்களில் நடித்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். முன்பு பேட்டி ஒன்றில் பேசிய இவர், தான் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திற்கு வந்த முதல் பாசிட்டிவ் விமர்சனம் சிலம்பரசனிடம் இருந்துதான் என அவர் கூறியுள்ளார்.

Pradeep Ranganathan: லவ் டுடே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தே சிம்பு கணிச்சிட்டாரு – பிரதீப் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
சிம்பு கணிப்பு பற்றி பிரதீப் ரங்கநாதன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jun 2026 08:39 AM IST

ரவி மோகனின் நடிப்பில் வெளியான கோமாளி (Comali) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல், இறுதியாக கேமியோ வேடம் ஒன்றிலும் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவே, அவரே தனது இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம்தான் லவ் டுடே (Love Today). கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் மறுத்த நிலையில், இறுதியாக நடிகை இவனா (Ivana) நடித்திருந்தார். இவர்கள் இருவருக்குமே இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.

இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்திற்கு முதல் முதலில் வந்த நல்ல விமர்சனம் சிலம்பரசனிடம் (Silambarasan) இருந்துதான் என கூறினார்.

இதையும் படிங்க: தனுஷ் சாரை முதல் முறை பார்த்த தருணம் – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

லவ் டுடே படத்திற்கு சிலம்பரசன் கொடுத்த ஆதரவு பற்றி பிரதீப் ரங்கநாதன் பேசிய விஷயம்:

அந்த பேட்டியில் பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், “சிம்பு சாருடன் நான் நிறையதடவை போனில் பேசியிருக்கிறேன். அது எப்படி என்றால், எனது முதல் பாடமாக லவ் டுடே முதல் பார்வை வெளியாகியிருந்த போது எனக்கு கால் பண்ணியிருந்தார். அந்த சமையத்தில் எனக்கு எல்லாமே நெகடிவ் விமர்சனமாகவே வந்தது. ஆனால் அவர்மட்டும் என்னை பாராட்டி பேசினார். சிம்பு சார் என்னிடம், “பயங்கர உறுதியாக இருக்கீங்க, ஆனால் முதல் படத்தினுள் யாரு இப்படி இருந்ததில்லை. ஃபர்ஸ்ட் லுக் சூப்பராக இருக்கு, நிச்சயம் இந்த படம் ஹிட்டாகும் என நினைக்கிறேன். ஆள் தி பெஸ்ட். நான் இதை உங்களிடம் முதலி சொல்லிவிடுகிறேன்” என என்னிடம் கூறினார்.

இதையும் படிங்க: தளபதிக்கு தங்கையாக நடித்தவர்.. இந்த போட்டோவில் இருப்பது எந்த நடிகை-னு தெரியுமா?

அதன் பிறகு ட்ரெய்லர் வெளியான பின் கால் பண்ணாரு, “அப்போது நான் என்ன நினைத்தேனோ, அதே ட்ரெய்லரில் வந்திருக்கிறது” என சொன்னார். பின் படத்தின் வெளியீட்டிற்கு பின் கால் பண்ணி, “நான் முதலிலே சொன்னே லா” என கூறினார். அவர் வெறும் லவ் டுடே பட போஸ்டரை பார்த்தே யூகித்துவிட்டார் என அதில் பிரதீப் ரங்கநாதன் கூறியிருந்தார்.

பிரதீப் ரங்கநாதனின் இன்ஸ்டாகிடம் போட்டோஷூட் பதிவு:

பிரதீப் ரங்கநாதன் தனது இயக்கத்தில் ஹீரோவாக புது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் ஒருபுறம் நடக்க, தனது தயாரிப்பில் மமிதா பைஜூவை வைத்து புது படத்தை உருவாக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us