AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Keerthy Suresh: தனுஷ் சாரை முதல் முறை பார்த்த தருணம் – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh About Dhanush: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் தனுஷை முதல் முறையாக சந்தித்த தருணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் சொன்ன சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

Keerthy Suresh: தனுஷ் சாரை முதல் முறை பார்த்த தருணம் – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் மற்றும் தனுஷ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jun 2026 08:36 AM IST

மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தற்போது தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினியாக கலக்கிவருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இப்படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது . கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் இவர் தனது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டில் (Antony Thattil) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் தனது திருமணத்திற்கு பின் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என இயக்குநர்களிடம் கூறுவதாக சொல்லப்பட்டது.

ஆனால் இவர் தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் படங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ், நடிகர் தனுஷை (Dhanush) முதல் முறையாக நேரில் சந்தித்த தருணம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

தனுஷை முதல் முறையாக பார்த்த தருணம் குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்:

அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ், “நான் தொடரி படத்திற்கு முன்னே தனுஷ் சாரை ஒரு படத்தின் விஷயமாக மீட் பண்ணிருக்கேன். அதன் பிறகு தொடரி பட ஷூட்டிங்கின்போதுதான் பார்த்தேன். ஷூட்டிங்கின் முதல் நாளில் தனுஷ் சாறை சந்திக்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. தனுஷ் சாரின் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். தனுஷ் சார் முன்னாடி நடிக்கப்போகிறேன் என தெரிந்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.

இதையும் படிங்க: முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு

தொடரி பட ஷூட்டிங்கின்போது கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் தனுஷ் சார் ரொம்பவே கூல்-ஆனா நபர். அதனால் அவர் எனக்கு நடிப்பதற்கான இடத்தையும் கொடுத்தறது. எதாவது சந்தேகம் என்றாலும் அவரிடமே நான் கேட்டுக்கொண்டேன்” என அதில் அவர் தனது தொடரி பட ஷூட்டிங்கின்போது தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி தெரிவித்திருந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

கீர்த்தி சுரேஷின் புது படங்கள்:

நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில், கண்ணிவெடி, தோட்டம், ரௌடி ஜனார்தனா, சத்யவான் சாவித்ரி, ரஃப்தார் மற்றும் அணில் ரவிப்புடி இயக்கத்தில் புதிய படம் என கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் தனது கைவசத்தில் வைத்துள்ளார். இதுபோக புது படங்களுக்கான கதைகளையும் அவர் கேட்டுவருவதாக கூறப்படுகிறது.

Follow Us