AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு

Samantha Ruth Prabhu Talks About Race In Cinema | தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு
சமந்தா ரூத் பிரபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2026 14:30 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சமந்தா ரூத் பிரபு. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைத்தன்யாவின் ஜோடியாக நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை சமந்தா ரூத் பிரபு. பிறகு தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை சமந்தா ரூத் பிரபு. பிறகு தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக பலப் படங்களில் நடித்து உள்ளார்.

தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு உல்நலக் குறைவு காரணகாம கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். பிறகு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். படங்களை தயாரித்து வந்த நடிகை சமந்தா நடிக்கவும் தொடங்கினார். முன்பு எல்லாம் நாயகனின் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது கதையின் நாயகியாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மா இண்டி பங்காரம். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அப்படி ஒரு விழாவில் நடிகை சமந்தா ரூத் பிரபு சினிமாவில் ரேஸ் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன்:

முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என்றும் அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் போட்டியின் இறுதி வரை சென்று வெற்றியடைய வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டு இருந்தேன். காலப்போக்கில் தான் அப்படி ஒரு பந்தயமே இல்லை என்று நாம் சென்று பிடிக்கவேண்டிய எல்லைக் கோடு என்பது இல்லை என்றும் உணர்ந்து கொண்டேன். தற்போது நான் சினிமாவில் எல்லை கோடுகளை பார்ப்பதில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா 47 பட இயக்குநரை புகழ்ந்து பேசிய மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர்

இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் பேச்சு:

Also Read… Love Oh Love: லவ்ல பிரச்சன இல்ல.. லவ்வே பிரச்சனதான்.. பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் பட டீசர் வெளியானது!

Follow Us