AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!

Vijay Deverakondas Education Initiative: விஜய் தேவரகொண்டா கடந்த 2026 ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தனது தந்தையின் கிராமத்தில் நடந்த திருமண விழாவின்போது பள்ளி கல்வி தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 180 குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jun 2026 13:07 PM IST

தெலுங்கு சினிமாவில் இளம் கதாநாயகனாக நுழைந்து, தற்போது படங்களில் லீட் கதாநாயகனாக நடித்து அசத்திவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarekonda). இவர் தென்னிந்திய மக்கள் மத்தியில் ஹீரோவாக மிகவும் பிரபலமானவர். இவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் (Rashmika Mandanna) கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றிருந்தது. இவர்கள் தங்களின் திருமணத்திற்கு பிறகு, பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கிவந்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது தந்தையின் கிராமமான தும்மன்பேட்டைக்கு (Thummanpet) சென்றிருந்தார். மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி தொகை வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியிலும், அவர்களின் கிராம மக்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அவர் சொன்ன விஷயத்தை நிறைவேற்றியுள்ளார். அவர் தெலுங்கானாவில் அச்சம்பேட் மண்டலத்தில் உள்ள 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கிட்டத்தட்ட 180 பேருக்கு கல்வி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அது குறித்த விவரங்களை தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அயோத்தி பட இயக்குநருடன் புது படத்தில் இணைந்ததை உறுதிசெய்த விஜய் ஆண்டனி!

மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்குவது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது தந்தையின் கிராமமான தும்மன்பேட்டைக்கு சென்று மக்களை சந்தித்தார். அப்போது மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்குவது குறித்து அவர் தெரிவித்திருந்த நிலையில், அதை தற்போது நிறைவேற்றியுள்ளார். அவர் தெலுங்கானாவில் அச்சம்பேட் மண்டலத்தை சார்ந்த 9 மற்றும் 10ம் ஆம் வகுப்பு கடின உழைப்போடு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா தங்களின் பெற்றோர்களை பெருமை படித்தும் விதத்தில் கிட்டத்தட்ட 180 குழந்தைகளுக்கு கல்வி தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் சாருடன் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் – கார்த்திக் சுப்புராஜ்!

இது எனது மற்றும் ராஷ்மிகாவின் ஒரு சிறிய கனவின் தொடக்கம் என அதில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த விஷயம் அவரின் ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் மிகவும் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் இதையடுத்து மேலும் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக விஜய் தேவரகொண்டா இதுபோன்ற செயல்களில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us