MS Dhoni: ஸ்மார்ட் லுக்! பைக் ரைடில் வலம் வரும் தல தோனி.. வைரலாகும் வீடியோ!
MS Dhoni Superbike Ride: 45 வயதான எம்.எஸ்.தோனி தனது ஹெல்மெட்டைக் கழற்றி, நூற்றுக்கணக்கான உற்சாகமான ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அவரது வாகனப் பயணத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால், கூட்டம் உற்சாகத்தில் திளைத்தது. தோனியைப் பொறுத்தவரை, வாகனங்கள் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களை போல, கிரிக்கெட்டிலிருந்து ஐபிஎல்லில் (IPL) ஓய்வு பெற்றதிலிருந்து, மகேந்திர சிங் தோனியும் தன் மனதிற்குப் பிடித்தபடி வாழ்ந்து வருகிறார். தோனிக்கு கார்கள் மற்றும் பைக் மீது எவ்வளவு பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும். தோனி அடிக்கடி பைக் ஓட்டும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது சமீபத்தில் தோனி சென்னையில் பைக் ஓட்டுவது காணப்பட்டுள்ளது. இதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனி எங்கு சென்றாலும், அவரது ரசிகர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். சமீபத்தில், சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், தோனி (MS Dhoni) சர்வதேச பந்தய தடத்தில் தனது வாகனத்தை ஓட்டி மகிழ்ந்தார். அவர் எந்த சிரமமும் இன்றி, அதிவேகத்தில் சில சுற்றுகளை நிறைவு செய்தார்.
ALSO READ: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரஹானே.. உணர்ச்சிப்பூர்வமான பதிவு!




வைரலாகும் தோனி பைக் ரைடு:
Mahi riding my favorite bike😭🔥 pic.twitter.com/FOwqdqaRS5
— 𝗦💛 (@mostlydhoni78) August 3, 2026
45 வயதான எம்.எஸ்.தோனி தனது ஹெல்மெட்டைக் கழற்றி, நூற்றுக்கணக்கான உற்சாகமான ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அவரது வாகனப் பயணத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால், கூட்டம் உற்சாகத்தில் திளைத்தது. இருப்பினும், இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. தோனியைப் பொறுத்தவரை, வாகனங்கள் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தோனியின் சென்னை மீதான காதல் அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் தோனி மீதான மோகம் இருந்தாலும், சென்னையில் அதற்கென ஒரு தனி மோகம் உள்ளது.
ALSO READ: மும்பையை விட்டு வெளியேறும் ஹர்திக்.. கொக்கி போடும் கேகேஆர், எல்எஸ்ஜி!
தோனி கடந்த 2026 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார், ஆனால் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. அடுத்த ஐபிஎல் 2027 சீசனில் அவர் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளெமிங், 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணியிலிருந்து விலகியுள்ளார். இதன் மூலம், தோனியுடனான அவரது புகழ்பெற்ற தலைமைப் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் கூட்டணி 5 ஐபிஎல் பட்டங்களையும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று தந்தது. அடுத்த ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு, சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது கிரிக்கெட் செயல்பாடுகளை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ள நிலையில், அணியின் அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தோனியே அணியின் அடுத்த பயிற்சியாளராக இருக்கலாம் என்று சிலர் ஊகிக்கின்றனர். ஆனால் அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.