IND W Vs BAN W Live : 2 ஓவர்களில் 19 ரன்கள்.. ரன் வேட்டையில் இந்திய மகளிர்!
IND W Vs BAN W Live Score Updates in Tamil : ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பிரிவில், ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தற்போது, அரையிறுதிப் போட்டி செப்டம்பர் 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. போட்டி தொடர்பான நேரடி அப்டேட்களை இங்கே காணலாம்
LIVE NEWS & UPDATES
-
IND W vs BAN W: 2 ஓவர்களில் 19 ரன்கள்.. ரன் வேட்டையில் இந்திய மகளிர்!
2026 ஆசிய விளையாட்டு போட்டி அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய மகளிர் அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
-
IND W vs BAN W: வங்கதேச மகளிர் அணியின் பிளேயிங் லெவன்!
திலாரா அக்தர், ஜுவைரியா ஃபெர்டஸ், சோபானா மோஸ்டரி, நிகர் சுல்தானா(விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஷோர்னா அக்தர், ஷர்மின் அக்தர், ஷஞ்சிதா அக்தர் மேக்லா, ரபேயா கான், நஹிதா அக்தர், மருஃபா அக்டர், சுல்தானா காதுன்
-
IND W vs BAN W: இந்திய மகளிர் அணியின் பிளேயிங் லெவன்!
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பார்தி ஃபுல்மாலி, ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), குணாளன் கமாலினி, தீப்தி ஷர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி, நந்தனி ஷர்மா, கிராந்தி கவுட்
-
IND W vs BAN W: முதலில் பேட் செய்யும் இந்திய மகளிர்.. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துமா வங்கதேசம்..?
2026 ஆசிய விளையாட்டு போட்டி அரையிறுதியில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 20ம் தேதி இந்திய மகளிர் அணியும், வங்கதேச மகளிர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
-
IND W Vs BAN W Live : எங்கே நேரலையில் பார்க்கலாம்?
இந்தியா-பங்களாதேஷ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதி ஆட்டம் சோனி ஸ்போர்ட்ஸ் 3-ல் நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்தப் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பு சோனி LIV செயலி மற்றும் இணையதளத்தில் கிடைக்கும்.
-
காலை 10.30 மணிக்கு தொடங்கும்
இந்தியா-பங்களாதேஷ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்குத் தொடங்கும்.
-
இந்தியா-பங்களாதேஷ் எங்கே நடக்கவுள்ளது?
இந்தியா-பங்களாதேஷ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதி ஆட்டம், ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் நடைபெறும்
நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது. ஜப்பானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஒருதலைப்பட்சமான வெற்றியைப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது, இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் அவர்கள் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளனர். மறுபுறம், சீனாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதே வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் அவர்கள் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தனர். எனவே, இந்திய அணி அதே வேகத்தைத் தொடர முயற்சிக்கும் வேளையில், வங்கதேசம் அந்தத் தோல்விக்குப் பழிவாங்க முனைந்துள்ளது.
Published On - Sep 20,2026 9:23 AM