மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (செப்.17) வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டது. வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செப்.11 முதல் கால பூஜைகள் நடைபெற்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.