சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், மொபைல் நெட்வொர்க் பிரச்சினையால் மனமுடைந்ததாக கூறப்படும் 52 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் உணவு சாப்பிட்டுக்கொண்டே அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்போது திடீரென மொபைல் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகவும் கோபமடைந்து, தனது செல்போனை தரையில் தூக்கி வீசியதாகவும், பின்னர் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.