AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா...? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்

அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா…? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்

Vinoth V
Vinoth V | Updated On: 18 Sep 2026 17:26 PM IST

திருவாரூர் அருகே ஈபி காலணியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்க செல்லும் வெளியூர் மற்றும் வேறு கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள சாமானிய மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியாது என்றும், அவ்வாறு வழங்க கூடாது என அதிகாரிகள் தங்களுக்கு உத்தவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், ஈபி காலணியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடை எண் 18AP041PN கடையில் பொருட்கள் வாங்க செல்லும் வெளியூர் மற்றும் வேறு கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள சாமானிய மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியாது என்றும், அவ்வாறு வழங்க கூடாது என அதிகாரிகள் தங்களுக்கு உத்தவிட்டுள்ளதாகவும், அரசு போதுமான அளவு பொருட்கள் கடைகளுக்கு அனுப்புவது இல்லை என்று அரசு மீது குற்றச்சாட்டை ஆணவத்துடன் பேசி அனுப்பி வருகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோ அமைச்சர் உத்தரவிற்கு இவ்வளவுதான் மரியாதையா..? என சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.

தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் பி வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் தங்களுக்குரிய கடைகளில் மட்டும் தான் பெருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

தமிழ்நாட்டில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேVஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நியாய விலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் ‘சாப்ட் காப்பி’ மொபைல் போனில்இருந்தால் கூட பொருட்களை வாங்கி கொள்ளலாம்”என்று கூறி இருந்தார். இந்த உத்தரவை பல்வேறு ரேஷன் கடை ஊழியர்கள் மதிக்காமல் புதிய தவெக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன என்றார்.

Published on: Sep 18, 2026 05:09 PM
Follow Us