17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் பல மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 11ஆம் தேதி முதல் கால பூஜைகள் தொடங்கிய நிலையில், 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தின்போது கோபுரங்களின் கீழ் இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று 7வது கட்ட யாகசாலை பூஜை!
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்!