மோகன்லால் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்! மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. லூசிஃபர் 3 படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தில் மோகன்லால் ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்க, முரளி கோபி திரைக்கதை எழுதியிருந்தார். படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக ‘எம்புரான்’ உருவானது.