AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSK New Coach: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!

MS Dhoni CSK: சிஎஸ்கே அணியில் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் 18 ஆண்டுகால பயிற்சியாளர் பதவிக்காலம் தோனியின் ஒப்புதலுடன் முடிவடைந்ததா என்பது தற்போது தெரியவில்லை என்றாலும், தோனி அந்த அணியில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கத் தயாராக இருப்பதாகவும், அடுத்த பயிற்சியாளரை அவரே தேர்ந்தெடுக்கக்கூடும் என்றும் சிஎஸ்கே அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

CSK New Coach: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!
எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jul 2026 19:26 PM IST

ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) முன்னதாக, ஸ்டீபன் ஃபிளெமிங் விலகியதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த பயிற்சியாளரை மிக தீவிரமாக தேடி வருகிறது. இந்தநிலையில், சிஎஸ்கே அணியில் எம்.எஸ்.தோனிக்கு ஒரு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவரது அந்தஸ்து மேலும் உயரப் போகிறது என்பது தெளிவாகிறது. சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரெவ்ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? களத்தில் இந்த 4 பேருக்கு கடும் போட்டி!

சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்..?

சிஎஸ்கே அணியில் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் 18 ஆண்டுகால பயிற்சியாளர் பதவிக்காலம் தோனியின் ஒப்புதலுடன் முடிவடைந்ததா என்பது தற்போது தெரியவில்லை என்றாலும், தோனி அந்த அணியில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கத் தயாராக இருப்பதாகவும், அடுத்த பயிற்சியாளரை அவரே தேர்ந்தெடுக்கக்கூடும் என்றும் சிஎஸ்கே அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக்கொள்ளக்கூடும் என்று தெரிகிறது. இருப்பினும், சரியான தேர்வு யார் என்பதில் தோனியின் முடிவே இறுதியானதாக இருக்க வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே அணியில் ஒரு வீரராக தோனி

எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சிஎஸ்கே தோனியை ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால், தோனி சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரராகவே கணக்கில் எடுத்து கொள்வார்.

ALSO READ: இந்திய அணியின் கேப்டனும் மாற்றம்.. நேரமும் மாற்றம்! ஏன் தெரியுமா..?

சிஎஸ்கே அணியில் மெண்டராக தோனியா..?

காயம் காரணமாக தோனி 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதேநேரத்தில், தோனி 2027-ல் விளையாடுவாரா என்பது முற்றிலும் அவரது தனிப்பட்ட முடிவாகும். முன்னாள் சிஎஸ்கே கேப்டனான தோனி ஒரு வீரராக ஐபிஎல் 2027 சீசனில் விளையாடவில்லை என்றால், ஐபிஎல் 2027-ல் அணி நிர்வாகம் அவரை ஒரு மெண்டராக களமிறங்கலாம். அப்படி இல்லையென்றால், எம்.எஸ். தோனிக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியும் இல்லாமல், கிரிக்கெட் தொடர்பான விஷயங்களின் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us