AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG 1st ODI: ஆர்ச்சருக்கு எதிராக அதிசயம்.. நடராஜராக உருவெடுத்த ரோஹித்.. வைரலாகும் வீடியோ!

Rohit Sharma Nataraja Shot Viral Video: ரோஹித் ஷர்மாவின் 'நடராஜர் ஷாட்' தினேஷ் கார்த்திக்கை திகைக்க வைத்தது. இந்தத் தருணம் இந்திய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில் நிகழ்ந்தது. ஆர்ச்சர் ஒரு ஷார்ட் பந்தை வீச, அதை ஆரம்பத்திலேயே கணித்த ரோஹித் சர்மா அந்தப் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் கால்களை தூக்கி ஒரு அற்புதமான பவுண்டரிக்கு அனுப்பினார்.

IND vs ENG 1st ODI: ஆர்ச்சருக்கு எதிராக அதிசயம்.. நடராஜராக உருவெடுத்த ரோஹித்.. வைரலாகும் வீடியோ!
ரோஹித் சர்மா நடராஜர் வீடியோ
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jul 2026 14:43 PM IST

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான (IND vs ENG 1st ODI) தனது ஆதிக்கத்தை இந்தியா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. போட்டியை நடத்தும் அணிக்கு எதிராக தனது 6வது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 259 ரன்கள் என்ற இலக்கை 28 பந்துகள் மீதமிருக்க எட்டிய இந்திய அணி, எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் ஒருநாள் வடிவத்தில் இங்கிலாந்தின் 12 ஆண்டுகால தோல்வியற்ற தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியாவின் (Indian Cricket Team) இந்த அற்புதமான வெற்றியே அனைவரின் பேச்சாக இருந்தபோதிலும், சேஸிங்கின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா அடித்த ஒரு ஷாட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

ALSO READ: இங்கிலாந்தில் சொதப்பிய ரோஹித், கோலி.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..!

அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் தனது தனித்துவமான புல் ஷாட்டை ஆடி, ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தங்களின் பலமான எட்ஜ்பாஸ்டனில் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. 2014 முதல் ஆடவர் ஒருநாள் போட்டிகளில் இங்கு தோல்வியடையாமல் இங்கிலாந்து அணி இருந்து வருகின்றனர். இருப்பினும், இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, இங்கிலாந்து அணியை 258 ரன்களுக்குள் கட்டுப்படுத்த, இந்திய அணி இலக்கை எளிதாக எட்டியது.

ரோஹித் ஷர்மாவின் ‘நடராஜர் ஷாட்’


ரோஹித் ஷர்மாவின் ‘நடராஜர் ஷாட்’ தினேஷ் கார்த்திக்கை திகைக்க வைத்தது. இந்தத் தருணம் இந்திய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில் நிகழ்ந்தது. ஆர்ச்சர் ஒரு ஷார்ட் பந்தை வீச, அதை ஆரம்பத்திலேயே கணித்த ரோஹித் சர்மா அந்தப் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் கால்களை தூக்கி ஒரு அற்புதமான பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த ஷாட்டின் அழகைக் கண்டு வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக், நடராஜப் பெருமானின் புகழ்பெற்ற நடனத்தின் பெயரால் அழைக்கப்படும் ரோஹித்தின் பிரபலமான ‘நடராஜர் ஷாட்டுடன்’ இதை ஒப்பிட்டார்.

ALSO READ: அசராமல் அரைசதம் அடித்த அக்சர் படேல்.. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

முதல் போட்டியில் நடந்தது என்ன?

எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆடவர் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தின் 12 ஆண்டு கால தோல்வியற்ற பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து சிறப்பாகத் தொடங்கியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் பின்னர் மிகவும் பொறுப்பற்ற முறையில் பந்துவீசியதால், இங்கிலாந்து அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்.அதே நேரத்தில் லியாம் டாசன் 68 ரன்கள் எடுத்து முக்கியப் பங்களிப்பை வழங்கினார். இந்த ஜோடி 111 ரன் பார்ட்னர்ஷிப், இங்கிலாந்து அணி மீண்டு வந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பதற்கு முன்பு 258 ரன்களை எட்டியது. அதன்பிறகு, இந்திய அணி 45.2 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Follow Us