AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: அசராமல் அரைசதம் அடித்த அக்சர் படேல்.. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

IND vs ENG 1st ODI Highlights: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த போதிலும் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ஜோ ரூட் மற்றும் டாம்சனின் கூட்டணி உதவியால், இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கில் மற்றும் அக்சர் படேலின் அரைசதத்தின் உதவியால் 45. 2ஓவர்களில் வெற்றி பெற்றது. 

IND vs ENG: அசராமல் அரைசதம் அடித்த அக்சர் படேல்.. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!
Axar Washi
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 14 Jul 2026 23:28 PM IST

இந்தியா – இங்கிலாந்து இடையிலான (IND vs ENG) முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த போதிலும் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ஜோ ரூட் மற்றும் டாம்சனின் கூட்டணி உதவியால், இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் (Indian Cricket Team) கேப்டன் கில் மற்றும் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தின் உதவியால் 45. 2 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

ALSO READ: இங்கிலாந்தில் சொதப்பிய ரோஹித், கோலி.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..!

முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து, ஜோ ரூட் மற்றும் லியாம் டாசன் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 258 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட் செய்த இந்திய அணி, 46வது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக ஓய்வு பெறுவதற்கு முன்பு, இந்திய அணிக்காக 80 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அக்சர், ஆட்டத்தை வெல்லும் விதமாக 57 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் முக்கியமான 52 ரன்களை எடுத்தார். இதன்மூலம், இருவரும் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

ரோஹித் – கோலி சொதப்பல்:

இங்கிலாந்து கொடுத்த 259 ரன்கள் என்ற இலக்கை எதிர்நோக்கிய இந்திய அணி, அனுபவமிக்க பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தது. ரோஹித் சர்மா 21 பந்துகளில் 11 ரன்களும், விராட் கோலி 6 பந்துகளில் வெறும் 5 ரன்களும் எடுத்தனர். இந்தியா 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதனைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து 109 ரன்களுக்கு ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கில் ஆரம்பம் முதலே சிறப்பான ஃபார்மில் இருந்தார்.

ALSO READ: அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் விட்டுகொடுக்காத இங்கிலாந்து.. இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!

ஷ்ரேயஸ் ஐயர் 53 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் கில் 75 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்தபோது, ​​பேட்டிங் செய்துகொண்டிருந்த வேளையில் முதுகு வலியால் காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் வாஷிங்டன் சுந்தரும் அக்சர் பட்டேலும் பொறுப்பேற்றனர். சுந்தர் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரின் உதவியுடன் 63 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் 52 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 102 ரன்களுக்கு ஒரு சிறப்பான சதக்கூட்டணியை அமைத்தனர்.

Follow Us