Team India: இங்கிலாந்தில் சொதப்பிய ரோஹித், கோலி.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..!
IND vs ENG 1st ODI: நீண்ட நாட்களுக்கு பிறகு, விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) களத்தில் இறங்குவதை காண ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். இருப்பினும், இரு வீரர்களாலும் பெரியளவில் ரன்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. ரோஹித் ஷர்மா 21 பந்துகளில் ஒரே ஒரு பவுண்டரி அடித்து, வெறும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கும் (Indian Cricket Team) இங்கிலாந்துக்கும் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்கள் அதிர்ச்சியை அளித்தனர். இரு பேட்ஸ்மேன்களும் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு, விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) களத்தில் இறங்குவதை காண ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். இருப்பினும், இரு வீரர்களாலும் பெரியளவில் ரன்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. ரோஹித் ஷர்மா 21 பந்துகளில் ஒரே ஒரு பவுண்டரி அடித்து, வெறும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் – கோலிக்கு இடம் உண்டா? கில் ஓபன் டாக்!
3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி, 6 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணி இலக்கை விரட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலக்கை விரட்டும் முயற்சியில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்து, இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்துவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர்.




ரோஹித் கடைசியாக 2026 ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், கோலி கடைசியாக 2026 ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் களமிறங்கினர்.
இங்கிலாந்து அணி எடுத்த 258 ரன்கள்:
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த இங்கிலாந்து, ஒரு பரபரப்பான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 61 ரன்களுக்கு விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பின்னர், 107 ரன்களுக்கு ஆறு பேட்ஸ்மேன்களை இழந்தது. இங்கிலாந்து அணி 150 ரன்களைக் கடப்பதே கடினமாகத் தோன்றியது. ஆனால், லியாம் டாசன் மற்றும் ஜோ ரூட் 7வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் (134 பந்துகளில்) சேர்த்து, அணியை ஒரு கௌரவமான மொத்த ரன்களுக்கு கொண்டு சென்றனர். இங்கிலாந்து அணி தனது 7வது விக்கெட்டை 228 ரன்களுக்கு இழந்தது. இந்த கூட்டணியால், இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ALSO READ: அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் விட்டுகொடுக்காத இங்கிலாந்து.. இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்காக அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சிவம் துபே மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.